தமிழக கடலோர பகுதிகளில் 29ம் தேதி வரை மழை நீடிக்கும்!

பருவ மழை
பருவ மழை

டதமிழக கடலோர பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று முதல் 29ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதலே தொடர் மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ராணிப்பேட்டை, வாலாஜாபேட்டை, ஆற்காடு, விசாரம், ரத்தினகிரி , காவேரிப்பாக்கம் ,சோளிங்கர் ,அரக்கோணம், கலவை ஆகிய பகுதிகளில் பரவலாக மிதமான மழை பெய்துவருகிறது.

இதன்காரணமாக வடதமிழக கடலோர பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து இராணிப்பேட்டை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்கள். அதேபோல் வேலூர் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை தொடக்கப்பள்ளிகளுக்கு இன்று ஒரு நாள் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com