#BREAKING : தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000 ரூபாய் வழங்கப்படும் - பாஜகவின் தேர்தல் அறிக்கை!

பாஜகவின் தேர்தல் அறிக்கை!
பாஜகவின் தேர்தல் அறிக்கை!image source:dinamani
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற சில தினங்களே இருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடையே சென்று பரப்பி வரும் நிலையில் தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலை ஒட்டி தங்கள் தேர்தல் வாக்குறுதி அறிக்கையை வெளியிட்டுள்ளது பாஜக.

சென்னையில் சட்டமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கையை பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே பி நட்டா வெளியிட்டார்." புதிய யுகம் படைக்கும் தாமரை வாக்குறுதி 2026 "எனும் தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கை அண்ணாமலை ,தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது.

தமிழிசை சவுந்தரராஜன் தலைமையிலான குழுவினர் தமிழக பாஜகவிற்கான தேர்தல் அறிக்கை தயார் செய்ததாக கூறப்படுகிறது. பாஜகவின் முன்னாள் தேசிய தலைவர் ஜே பி நட்டா "இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்" என்று  தமிழில் கூறி உரையைத் துவங்கியது சிறப்பு. மேலும் "தமிழ்நாடு உலகின் பழமையான கலாச்சாரத்தை உடையது ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் பெருமை தரக்கூடியது" என்றும் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் ஜே பி நட்டா.

குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் 2,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்.

குடும்ப அட்டைக்கு ஆண்டுக்கு தலா மூன்று எல்பிஜி சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்

போக்சோ  வழக்குகளை விசாரிக்க சிறப்பு விரைவு நீதிமன்றங்கள்.

என் டி ஏ ஆட்சிக்கு வந்ததும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 10,000  ரூபாய் வழங்கப்படும்.

தமிழகத்தில் போதை பொருள் புழக்கத்தை ஒழிக்க தனித் துறை உருவாக்கப்படும்.

முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்களுக்கு ரூபாய் 10 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும்.

திருப்பரங்குன்றம் மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் பாரம்பரியம் பின்பற்றப்படும்.

முருகனைக் கொண்டாட தைப்பூசம் மாநில பண்டிகையாக அறிவிக்கப்படும்

சிறு குறு நிறுவனங்களுக்கு 50 லட்சம் வரை வட்டி இல்லா கடன் வழங்கப்படும் ..

தேனீ வளர்ப்பு கோழி வளர்ப்பதற்காக சிறுகுறு விவசாயிகளுக்கு ரூபாய் 50,000 மானியம் ஒருமுறை வழங்கப்படும்.

மீனவர்களுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரண உதவித் தொகை ரூபாய் 8,000த்தில் இருந்து 12,000 ஆக வழங்கப்படும்.

மேலும் 65 வயதுக்கு மேற்பட்ட முதியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை, கடனை கட்ட முடியாமல் தவிக்கும்  தகுதியானவர்களுக்கு கல்விக்கடன் தள்ளுபடி , மீன்பிடி தடைக்கால நிவாரணம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகள் அதிமுக தலைமையில் அமையப் போகும் ஆட்சிக்கு ஏற்றவாறு பாஜக தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com