மூன்று லட்சம் போலி வாக்காளர்கள் நீக்கம்:புதிய வாக்காளர் பட்டியல் வெளியீடு

வாக்காளர் பட்டியல்
வாக்காளர் பட்டியல்

மிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு அதில் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து தமிழக தேர்தல் ஆணையம் செய்திக்குறிப்பையும்  வெளியிட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்காளர் பட்டியல் ஆண்டுதோறும் திருத்தப்பட்டு புதிய பட்டியல் வெளியாவதுண்டு. சமீப காலங்களில் ஒவ்வொரு ஆண்டும் மூன்று முறை திருத்தம் செய்யப்பட்டு வாக்காளர் பட்டியல் வரைவு பொதுமக்களின் பார்வைக்காக வெளியிடப்படுகிறது.

இந்திய தேர்தல் ஆணையம், ஜனவரி 1-ந் தேதி மட்டுமல்லாது ஏப்ரல் 1, ஜூலை 1 மற்றும் அக்டோபர் 1 ஆகிய நாட்களையும் தகுதியேற்படுத்தும் நாளாக ஏற்றுக்கொண்டு புதிய வாக்காளர் பட்டியல்களை தயாரித்து வருகிறது. அதன் படி ஜூலை 1-ந் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாக கொண்டு புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

1 லட்சத்து 39 ஆயிரத்து 108 பேர் புதிய வாக்காளர்களாக சேர்க்கப்பட்டு உள்ளனர். 27 ஆயிரத்து 332 வாக்காளர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு புலம் பெயர்ந்திருககிறார்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 185 வாக்காளர்களின் பெயர்கள் இடமாறுதல், இறப்பு மற்றும் இரட்டைப் பதிவு ஆகிய காரணங்களுக்காக நீக்கப்பட்டு உள்ளன. 1 லட்சத்து 4 ஆயிரத்து 141 வாக்காளர்களின் பதிவுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

இதில் 18 வயது நிரம்பியவர்கள் அல்லது அடுத்து வரும் 3 மாதங்களில் 18 வயதை நிறைவடைய இருப்பவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று ஏற்கனவே அறிவித்திருந்தது.  புதிதான  பதிவு செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்கள், திருத்தம் செய்வதற்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை பரிசீலித்து அதற்கேற்ப புதிய பட்டியல் வெளியிடப்பட்டிருக்கிறது.

தொடர் திருத்தக் காலத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்  பட்டியல்படி, அதாவது ஜூலை 10-ந் தேதி வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 6 கோடியே 10 லட்சத்து 39 ஆயிரத்து 316 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 3 கோடியே 29 ஆயிரத்து 237 ஆண் வாக்காளர்களும், 3 கோடியே 10 லட்சத்து 2 ஆயிரத்து 98 பெண் வாக்காளர்களும், 7 ஆயிரத்து 981 மூன்றாம் பாலினத்தவர்களும் இருக்கிறார்கள்.

திருத்தம் செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலினை, தேர்தல் ஆணையத்தின் இணையத்தளமான  https://elections.tn.gov.in/ என்னுமிடத்தில் சரிபார்த்துக் கொள்ளலாம். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாரல் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சரிபார்க்கும் பணி வருகின்ற 21.07.2023 முதல் தொடங்கப்பெறும் என்று தலைமை தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

வாக்காளர் பட்டியலில் உள்ள விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டைகள் சம்பந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com