#BIG BREAKING : பெரும்பான்மையுடன் சென்ற விஜய்க்கு ஆளுநர் நேரம் கொடுக்கவில்லை..!

tvk vijay
tvk vijay
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on

தமிழக சட்டமன்ற தேர்தலில் பெருவாரியாக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையில் இருந்த தவெக மேலும் பெரும்பான்மை இடங்களை பெறுவதற்காக மற்ற கட்சிகளை நாடி இருந்த நிலையில் திமுக கூட்டணியில் இருந்த காங்கிரசைத் தொடர்ந்து ஒவ்வொரு கட்சியாக தற்போது தவெகவுக்கு ஆதரவளித்து விஜய் முதல்வர் ஆவதை உறுதி செய்து உள்ளது.

ஏற்கனவே காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக-வுக்கு ஆதரவு தந்திருந்த நிலையில் 116 இடங்களுடன் மேலும் 2 இடங்கள் தேவை பெரும்பான்மைக்கு என்ற நிலையில் திமுக கூட்டணியில் இருந்த விசிக கட்சியின் ஆதரவை நாடியது தவெக. நேற்று மாலை முதல் விசிக்கு தலைவரான திருமா தனது ஆதரவை தெரிவிப்பார் என்று காத்திருந்த நிலையில் இன்று மாலை அக்கட்சியின் ஆதரவு தவெகவுக்கு கடிதம் மூலம அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் தவெகவின் பலம் 118 ஆக உயர்ந்தது. இனி ஆட்சி அவைக்க எந்த தடையும் இல்லை என்று தாவிக்க கட்சியினர் ஆரவாரம் செய்து நிலையில் தற்போது திமுக கூட்டணியில் இருந்த ஐ யூ எம் எல் கட்சியும் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளது.

தற்போது ஐ யூ எம் எல் கட்சியும் நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மொத்தம் தவெகவின் பெரும்பான்மையின் பலம் 120 ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் நிலையான ஆட்சி அமையவும், ஜனநாயக ஆட்சியை உறுதி செய்யவும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு என திருமாவளவன் அறிவித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய்க்கு ஆதரவளித்த கட்சித் தலைவர்கள் தற்போது மக்கள் மாளிகைக்கு வருகை தர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.தமிழக முதலமைச்சராக விஜய் ஆளுநரை மீண்டும் சந்திக்க உள்ள விஜய் ஐ யூ எம் எல் கட்சியும் ஆதரவளித்தத்தின் மூலம் தவெகவின் பெரும்பான்மை பலம் 120 ஆக உயர்ந்தது இதனால் இறுதி பெரும்பான்மையுடன் தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் உரிமையை கோரி ஆளுநர் மாளிகைக்கு செல்கிறார் விஜய்.

நேற்று ஆதரவு இல்லை என மறுத்த நிலையில் ஐ யூ எம் எல் இன்று திடீரென தவெக அரசு அமைய ஆதரவளித்து உள்ளது ஆச்சரியத்தை அளிக்கிறது. எனினும் இதன் மூலம் தவெக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது

தற்போது நான்காவது முறையாக பெருவாரியான பெரும்பான்மை இடங்களை பெற்ற மகிழ்வில் ஆளுநரை சந்திக்க இருக்கிறார் விஜய் . அறுதிப்பெரும்பான்மை எம்எல்ஏக்களின் விபரங்களை தெரிவித்த உடன் ஆளுநர் ஆட்சி அமைக்க அனுமதி அளிப்பது உறுதியான நிலையில் விஜய் முதலமைச்சராக பதவி ஏற்பது குறித்து உறுதியான தகவல்கள் வெளிவரும்.

இந்நிலையில் ஆளுநரை சந்திக்க சென்ற விஜய்க்கு ஆளுநர் நேரம் கொடுக்காதாதால் மீண்டும் பட்டினப்பாக்கம் திரும்பினார்.தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இன்று இரவு 07.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லவிருப்பதாகல் விஜய் சந்திக்க முடியவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சற்றுமுன் வந்த தகவலின்படி, விஜயிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டு பெரும்பான்மை கடிதத்தை நாளை ஒப்படைக்க கூறியதாக ஆளுநர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

திங்கட்கிழமை பதவி ஏற்பு விழா நடைபெறும் எனவும் தகவல் நாளை தங்களுக்கு உகந்த நேரத்தில் வந்து பெரும்பான்மை கடிதத்தை விஜய் அளிக்கலாம் எனவும் ஆளுநர் மாளிகை தரப்ப கூறியுள்ளது. விஜய் விரும்பினால் திங்கட்கிழமை பதவியேற்பு விழா நடைபெறும் என விஜயிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

logo
Kalki Online
kalkionline.com