

தமிழ்நாட்டின் 2026 -27ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
* ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி இழப்பு
* நடப்பாண்டில் மட்டும் ரூ.9600 கோடி வருவாள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
* நிதி வருவாய் பகிர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
* தற்போதைய நிதிக்குழுவின் வரிப்பகிர்வு குறித்த பரிந்துரை ஏமாற்றம் அளிக்கிறது.
* 0.44% அளவிலேயே தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு அதிகரிப்பு
* போதிய அளவு நிதியை வழங்காமல் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த ஓன்றிய அரசு முயற்சி.ஒன்றிய அரசு தேவையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தால் நிதிநிலையின் அளவும் மேம்பட்டிருக்கும்.
* 10.86 லட்சம் வங்கி கணக்குள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.12,078 கோடி செயலற்ற நிதிகள் கண்டறிப்பட்டன.
* நிதிப்பகிர்பு 4.07 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு, கர்நாடகா, கேரளாவை விட தமிழ்நாட்டுக்கு நிதிப்பகிர்வு விகிதம் குறைவு
* வரிப்பங்கு குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ரூ.1,202 கோடி இழப்பு
* தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாய் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 540 கோடி
* 16-வது நிதிக்குழுவின் அறிக்கை தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
* சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவில் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை.