இனி ரேஷன் கடைகளில் முறைகேடு நடக்காது.. வந்தாச்சு புதிய ஆப்!

Tnepds
TnepdsIntel

மிழக ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்களை குறைந்த விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். பலரும் இந்த ரேஷன் கடைகளில் வரும் பொருட்களை நம்பியே குடும்பத்தை நடத்தி வருகின்றனர்.

நடுத்தர வர்க்கத்தினர் பெரும்பாலும் தமது குடும்பத்திற்குத் தேவையான பொருட்களை ரேஷன் கடையில் வாங்கிச் செல்கின்றனர். அவ்வப்போது ரேஷன் கடைகளில் சில முறைகேடு நடைபெற்று வருவது வாடிக்கையாகி உள்ளது. ஒருவரின் பெயரில் மற்றொருவர் பொருட்களை வாங்கி செல்வதும் அவ்வபோது நடைபெறுகிறது.

மேலும், ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை தனியாருக்கு விற்பனை செய்வதும் வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்கும் விதமாகத்தான் தமிழக அரசு விரல் ரேகை பதிவு கட்டாயம் என அறிவித்தது. மேலும் பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டது.

இந்த நிலையில், நம் ரேஷன் பொருட்கள் என்னென்ன உள்ளது. ஏற்கனவே வேறு யாரும் வாங்கிவிட்டார்களா என தெரிந்து கொள்ளும் வகையில் தமிழக அரசு ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதுதான் TNePDS என்ற செயலி. இந்த செயலியை நீங்கள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து, உங்களுக்கு தேவையான தகவல்களை நீங்கள் பெற்று கொள்ளலாம். இந்த செயலிக்குள் சென்றவுடன் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து ஓடிபியை சமர்பித்தால் உங்கள் ரேஷன் அட்டையின் விவரங்கள் தெரிந்துவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com