தமிழில் எழுத படிக்க தெரியுமா..? திருத்தணி முருகன் கோயிலில் வேலை காத்துக்கிட்டிருக்கு..! 

Thiruttani
Thiruttani
Published on

திருவள்ளூர் மாவட்ட திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் மற்றும் அதன் உபத்திருக்கோயில்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. கூர்க்கா, இரவு காவலர், சித்த மருத்துவர், ஓட்டுநர், செவிலியர், கணினி இயக்குபவர், கலைஞர்கள் என பலவேறு பதவிகளில் ஆட்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்படுகிறார்கள்.

நிறுவனம் : இந்து சமய அறநிலையத் துறை

வகை : தமிழ்நாடு அரசு வேலை

காலியிடங்கள் : 26

பணியிடம் : தமிழ்நாடு

ஆரம்ப தேதி : 08.10.2025

கடைசி தேதி : 05.11.2025

1. பதவி: கூர்க்கா

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

2. பதவி: இரவு காவலர்

சம்பளம்: மாதம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

3. பதவி: மிருதங்கம்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள்/ அரசு நிறுவனங்கள்/ யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று.

3. திருக்கோயில் பழக்க வழக்கம்/ நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

4. பதவி: புஜங்கம்

5. பதவி: வேதபாராயணம்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள்/ அரசு நிறுவனங்கள்/ யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் தொடர்புடைய துறையில் குறைந்தபட்சம் மூன்றாண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

3. வேத ஆகமங்கள் கற்றிருத்தல் வேண்டும்.

4. திருக்கோயில் பழக்க வழக்கம்/ நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

6. பதவி: கொடைகாரர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

7. பதவி: மாலை கட்டி

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. திருக்கோயில் பழக்க வழக்கம்/ நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

3. பூஜைகள் மற்றும் உற்சவங்களுக்கு தெய்வங்களை அலங்கரிப்பதற்காக மாலைகள் கட்டும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

8. பதவி: தமிழ் புலவர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. திருக்கோயில் பழக்க வழக்கம்/ நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

3. யாதொரு பல்கலை கழகத்தில் அல்லது அதற்கு இணையான தமிழில் B.Lit அல்லது M.A. அல்லது M.Lit பட்டம் கல்வித் தகுதி பெற்றிருத்தல் வேண்டும்.

4. திருமுறைகள் ஒப்புவித்தலில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

9. பதவி: சமய பிரசங்கி

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. சமய நிறுவனங்கள்/ அரசு நிறுவனங்கள்/ ஏனைய யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் ஆகமப்பள்ளி அல்லது வேதபாடசாலையில் ஓராண்டு படிப்பினை மேற்கொண்டதற்கான சான்றிதழை பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம்/ நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

10. பதவி: சித்த மருத்துவர்

சம்பளம்: மாதம் ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. திருக்கோயில் பழக்க வழக்கம் /நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

2. சித்த மருத்துவத்தில் பட்டப்படிப்பும் மற்றும் அறுவை சிகிச்சையில் பட்டமும் (B.S.M.S) பெற்றிருக்க வேண்டும்.

3.தமிழ்நாடு சித்த மருத்துவ கவுன்சில் பதிவு பெற்றிருக்க வேண்டும்.தமிழ்நாடு வேலைவாய்ப்பு

11. பதவி: ஓட்டுநர்

சம்பளம்: மாதம் ரூ.18,500 முதல் ரூ.58,600 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் அல்லது இணையான அரசால் அங்கீகாரம் பெற்ற தேர்வில் தேர்ச்சி.

2. இலகு ரக வாகனம் மற்றும் கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் மற்றும் முதலுதவி குறித்த சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

3. ஓட்டுநராக பணியாற்றியதற்கான ஒரு வருடம் முன் அனுபவம் பெற்றிருத்தல் வேண்டும்.

4. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

12. பதவி: செவிலியர்

சம்பளம்: மாதம் ரூ.14,000/-

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

2. செவிலியர் (NURSING) B.Sc (or) Diploma in Nursing LL & வேண்டும்.

3. செவிலியர்/பேறுகால செவிலியர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

13. பதவி: கணினி இயக்குபவர்

சம்பளம்: மாதம் ரூ.15,000/-

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

2.அரசால்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட கணினி அறிவியலில் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

3.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு சான்றிதழ் (Computer Automation) பெற்றிருக்க வேண்டும்.

14. பதவி: நாதஸ்வரம்

சம்பளம்: மாதம் ரூ.15,700 முதல் ரூ.50,000 வரை

காலியிடங்கள்: 03

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள்/அரசு நிறுவனங்கள்/யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று

3. திருக்கோயில் பழக்க வழக்கம் / நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

இதையும் படியுங்கள்:
பட்டாசுப் புகை ஏற்படுத்தும் சுவாச நோய்கள்: அதிர்ச்சி தகவல்!
Thiruttani

15. பதவி: துப்புரவாளர்

சம்பளம்: மாதம் ரூ.10,000 முதல் ரூ.31,500 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

16. பதவி: தட்டச்சர்

சம்பளம்: மாதம் ரூ.15,300 முதல் ரூ.48,700 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1.பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்/ அரசால் அங்கீகரிக்கப்பட்ட அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. அரசு தொழில்நுட்ப தட்டச்சர் தேர்வில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

3. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முதுநிலை தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

4. கணினி பயன்பாடு மற்றும் அலுவலக தானியக்கத்தில் சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி அல்லது அதற்கு இணையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (Computer Automation)

5. திருக்கோயில் பழக்க வழக்கம் /நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

17. பதவி: பலவேலை

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 02

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

18. பதவி: காவலர்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்.

19. பதவி: மேளம்

சம்பளம்: மாதம் ரூ.11,600 முதல் ரூ.36,800 வரை

காலியிடங்கள்: 01

கல்வி தகுதி:

1. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.

2. யாதொரு சமய நிறுவனங்கள்/ அரசு நிறுவனங்கள்/ யாதொரு அரசால் அங்கீகரிக்கப்பட்ட யாதொரு நிறுவனங்களால் நடத்தப்படும் இசைப்பள்ளிகளிலிருந்து இது தொடர்புடைய துறையில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று.

3. திருக்கோயில் பழக்க வழக்கம் நடைமுறைகள் தெரிந்திருத்தல் வேண்டும்

வயது வரம்பு: இப்பணியிடங்களுக்கு 01.07.2025 தேதியின்படி, 18 வயதைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும். மேலும் விண்ணப்பதார்கள் 45 வய்து மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யும் முறை: இந்து சமய அறநிலையத்துறையில் கீழ் நிரப்பப்படும் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்களில் இருந்து தகுதியானவர்கள் தெரிவு செய்யப்பட்டு, நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள். நேர்காணலுக்கு வரும்போது அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து செல்ல வேண்டும்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 08.10.2025

விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.11.2025

விண்ணப்பிக்கும் முறை:

சுப்பிரமணியசுவாமி திருக்கோயில் பணியிடங்கள் விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் https://tiruttanimurugan.hrce.tn.gov.in/ என்ற கோயில் நிர்வாக இணையதளத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, விண்ணப்பப் படிவத்தை ரூ.100 கட்டணம் செலுத்தி அலுவலகத்தில் இருந்து பெற்றக்கொள்ள வேண்டும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து, தபால் வழியாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். ஒருவர் ஒரு பணிக்கு மட்டும் விண்ணப்பிக்கலாம்.

தபால் அனுப்பப்பட வேண்டிய முகவரி

இணை ஆணையர்/ செயல் அலுவலர்,

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்,

திருத்தணிகை - 631 209.

திருவள்ளூர் மாவட்டம்.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முறையான சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் நன்னடத்தை சான்றிதழ் ஆகியவற்றுடன் அனுப்பி விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com