

இன்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் அறிவிக்கை எண்: 19/2025 ஆகும். இதன்படி மொத்தமாக உள்ள 76 பணியிடங்களில் வேளாண்மை உதவி இயக்குனர் , உதவி மேலாளர் , கணக்கு அலுவலர் , முதுநிலை கணக்கு உதவியாளர் உள்பட பல பணிவாய்ப்புகள் உள்ளன.
விண்ணப்பிக்க தொடக்க தேதி : 22.12.2025 அன்று ஆரம்பிக்கிறது.
விண்ணப்பிக்க இறுதி தேதி : 20.01.2026 அன்றுடன் முடிவடைகிறது. விண்ணப்பங்களை திருத்த கால அவகாசமும் TNPSC கொடுத்துள்ளது. 24.01.2206 முதல் 26.01.2026 விண்ணப்பங்களில் ஏதேனும் பிழை இருந்தால் திருத்திக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க தகுதிகள்:
விண்ணப்பதாரர்கள் அனைவரும் 21 வயது பூர்த்தி செய்திருக்க வேண்டும் , அதற்கு கீழே இருப்பவர்கள் விண்ணப்பிக்க கூடாது. ஒவ்வொரு பணியிடத்திற்கும் ஏற்ப அதிகபட்ச வயது உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக வேளாண்மை உதவி இயக்குனர் பணிக்கு அதிகபட்சமாக 34 வயது பொதுப் பிரிவினருக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் மாற்றுத் திறனாளிகளுக்கு 44 வயது உச்ச வரம்பாகவும் , முன்னாள் ராணுவத்திற்கு 50 வயது உச்ச வரம்பாகவும் , ஆதரவற்ற கணவரை இழந்தவர்களுக்கு வயது உச்ச வரம்பு எதுவும் இல்லை. மற்ற பணியிடங்களுக்கும் இது போன்ற வயது வரம்பு தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்:
1.கணக்கு அலுவலர் நிலை (II) - 8
2.வேளாண்மை உதவி இயக்குநர் - 26
3.உதவி மேலாளர் (கணக்கு) - 9
4. உதவி மேலாளர் - 3
5.முதுநிலை கணக்கு அலுவலர் - 1
6.மேலாளர் நிலை II (நிதி) - 1
7.முதுநிலை அலுவலர் (நிதி) - 21
8.முதுநிலை அலுவலர் (சட்டம்) -1
9.மேலாளர் (இயந்திரவியல்& சந்தை) - 2
10.துணை மேலாளர் (மின்னியல், இயந்திரவியல், பொருட்கள்) - 3
11.உதவி மேலாளர் (பொருட்கள்) -1
கல்வித்தகுதி:
இந்தப் பணியிடங்களுக்கு வேளாண்மையில் முதுகலை பட்டப்படிப்பு, CA/ICWA கல்வியில் தேர்ச்சி, இளங்கலை சட்டப்படிப்பு, மார்க்கெட்டிங் எம்பிஏ, எந்திரவியல் மற்றும் எந்திரவியல் பொறியியலுடன் மெட்டிரியல் மேனேஜ்மெண்ட் டிப்ளமோ, மின்சாரப் பொறியியல் ஆகிய பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும். இதில் உதவி மேலாளர், வேளாண்மை உதவி இயக்குநர் , முதுநிலை அலுவலர் , கணக்கு அலுவலர் நிலை III, மேலாளர் நிலை III, ஆகிய பதவிகளுக்கு அனுபவம் தேவையில்லை. மற்ற பணிகளுக்கு குறிப்பிடத்தக்க அனுபவம் தேவை.
தேர்வு தேதி : எழுத்துத் தேர்வு நடைபெறும் நாட்கள் 07.03.2026 முதல் 08.03.2026 வரை
தேர்வுகள் :
மொத்தமாக 600 மதிப்பெண்களைக் கொண்டு இரண்டு தாள்களை கொண்ட தேர்வுகள் நடைபெற உள்ளன. முதல் தாளில் தமிழ், பொது அறிவு மற்றும் நுண்ணறிவு ஆகியவை இடம்பெறும். இரண்டாம் தாளில் முதன்மை பாடம் இடம்பெறும். தமிழில் குறைந்தபட்சம் 60 மதிப்பெண்கள் பெற வேண்டும். மற்ற பாடங்களில் 450 மதிப்பெண்களைப் பெற்றிருக்க வேண்டும் , மொத்தமாக 510 மதிப்பெண்களைப் பெற்றவர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுவார்கள்.
நேர்முகத்தேர்வு:
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்படுவார்கள். நேர்முகத் தேர்வில் ஆளுமை, பொது அறிவு , தொழில்நுட்பத் திறன் ஆகியவற்றை மதிப்பீடு செய்து தேர்வு செய்வார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பத்தை பதிவு செய்ய www.tnpscexams.in என்ற வலைதளத்தை அணுகவும் , மேலும் விவரங்களுக்கு www.tnpsc.gov.in சென்று தகவல் தகவல்களை அறிந்து கொள்ளலாம்.