TNPSC Hall Ticket : இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 2 - குரூப் 2A மெயின்ஸ் -க்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளில் ஒன்றான குரூப் 2 மற்றும் குரூப் 2Aக்கான முதன்மை தேர்வுகள் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் இன்று அதற்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசுப் பணிகளுக்கான போட்டி தேர்வுகளை தமிழக அரசு தேர்வாணையம் தொடர்ந்து நடத்தி வரும் நிலையில், பல்வேறு உயர்நிலை பணிகளுக்கான டிஎன்பிஎஸ்சியின் குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ முதன்மை தேர்வுகள் வருகின்ற 25ம் தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ-விற்கான முதல் நிலை தேர்வுகளை கிட்டத்தட்ட 10 லட்சம் தேர்வர்கள் எழுதிய நிலையில், அவர்களில் இருந்து மதிப்பெண்கள் அடிப்படையில் 57,641 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு முதன்மைத் தேர்வு நடத்தப்படுகிறது.
இதையடுத்து, இத்தேர்வை எழுதுபவர்கள் இதற்கான (Hall Ticket) நுழைவுச் சீட்டை https://www.tnpsc.gov.in/ என்ற இணையப்பக்கத்தில் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.