டிஎன்பிஎஸ்சி குரூப் - 4 முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்படாத 4 ஆயிரத்து 452 காலிப் பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு வரும் 21ஆம் தேதி தொடங்க உள்ளது.இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட 10 ஆயிரத்து 241 காலிப் பணிடங்களை நிரப்ப குரூப் 4 தேர்வு நடத்தப்பட்ட நிலையில், கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், வரி தண்டலர், கள உதவியாளர் உள்ளிட்ட 5 ஆயிரத்து 789 பணியிடங்கள் முதற்கட்ட கலந்தாய்வில் நிரப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீதம் உள்ள 4 ஆயிரத்து 452 காலிப்பணியிடங்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, 3 ஆயிரத்து 373 தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வருகின்ற 21ஆம் தேதி முதல் செப்டம்பர் 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
அதனைத் தொடர்ந்து ஆயிரத்து 79 சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு செப்டம்பர் 20 முதல் செப்டம்பர் 26 ஆம் தேதி வரை தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளதாகவும் டிஎன்.பிஎஸ்.சி அறிவித்துள்ளது.