குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகள் வெளியீடு!

குரூப் 1-முதல் நிலை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

டிஎன்பிஎஸ்சி நடத்தும் 17 வகையான தேர்வுகளின் முடிவுகள் அறிவிக்கப்படும் தேதி குறித்த அட்டவணை கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி டிஎன்பிஎஸ் நிர்வாகம் வெளியிட்டது. அதன் படி குரூப் 1 தேர்வு குறித்த முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

இதில் தேர்ச்சியடைந்தவர்களுக்கு குரூப்-1 முதன்மைத் தேர்வுகள் ஆகஸ்ட் மாதம் 10 முதல் 13ஆம் தேதி வரை நடைபெறும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதன்மைத் தேர்வுக்கு தேர்வு பெற்றவர்கள் 200 ரூபாய் தேர்வு கட்டணம் செலுத்தி உரிய ஸ்கேன் செய்து ஆவணங்களை மே மாதம் 8ம் தேதி முதல் 16 ஆம் தேதி வரை பதிவேற்றம் செய்ய வேண்டும் எனவும் அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. முதல்நிலைத் தேர்வு நவம்பர் 19-ம் தேதி மாநிலம் முழுவதும் நடைபெற்றது. அந்தத் தேர்வினை 1.9 லட்சம் பேர் மட்டுமே எழுதினர்.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 1 முதல் நிலை தேர்வு தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்டங்களில் 1080 மையங்களில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது.

குரூப்-1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்களும், துணை காவல் கண்காணிப்பாளர் 26 இடங்களும், வணிகவரித்துறை உதவி ஆணையர் 25 இடங்களுக்கும், கூட்டுறவுத்துறை துணைப்பதிவாளர் 13 இடங்களுக்கும், ஊரக வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் 7 இடங்களுக்கும், மாவட்ட வேலைவாய்ப்பு துறை அதிகாரிகள் 3 பதவிகள் என மொத்தம் 92 இடங்களுக்கான காலி பணியிடங்களை நிரப்புவதற்காகத் இந்த தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை 1,90,957 பேர் மட்டுமே தேர்வை எழுதியிருந்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com