கனமழை காரணமாக விழுப்புரம் , ராணிப்பேட்டை, அரக்கோணம் பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை!

heavy rain
heavy rain

மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுகுறைந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மாண்டஸ் புயல் கலக்கரையை கடந்த பின்பும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இன்று காலை முதல் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 33 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, செல்லம், கரூர், நாமக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் காரைக்கால் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கனமழை
கனமழை

கனமழை காரணமாக இன்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக ஏற்கனவே காஞ்சிபுரம், திருவள்ளூர், ஊத்துக்கோட்டை தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் தற்போது விழுப்புரம், மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் மற்றும் அரக்கோணம் வட்டங்களில் விடிய விடிய காலை முதல் மழை தொடர்ந்து பெய்து வருவதால் அரக்கோணம் மற்றும் நெமிலி வட்டங்களுக்கு மட்டும் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் இன்று விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com