அமிதாப் பச்சன்
அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சனுக்கு இன்று 80-வது பிறந்தநாள்; பிரபலங்கள் வாழ்த்து!

Published on

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் இன்று தனது 80ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அமிதாப் பச்சன் முதன்முதலாக 1969-ம் ஆண்டில் வெளியான `சாட் ஹிந்துஸ்தானி' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, தனது திரையுலக பயணத்தை தொடங்கினார். அந்த முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகருக்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.

அதன்பிறகு ஆனந்த், ப்யார் கீ கஹானி உட்பட பல படங்களில்  வெற்றிக்கொடி நாட்டி, பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் ஆனார். மேலும் அமிதாப் பச்சன் பத்மஸ்ரீ, பத்ம பூஷண், பத்ம விபூஷண் மற்றும் இந்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை வென்றுள்ளார்

இன்று அமிதாப் பச்சன் தனது 80-வது பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடி வருகிறார். அவரது பிறந்த நாளையொட்டி, முன்னணித் திரையுலக பிரபலங்க, மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களுடைய சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

logo
Kalki Online
kalkionline.com