எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்பப்பதிவு இன்றுடன் நிறைவடைகிறது!

medical seat
medical seat
Published on

மிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளின் அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கு www.tnhealth.tn.gov.in, www.tnmedicalselection.org ஆகிய இணையதளங்களில் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த ஜூன் மாதம் 28ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கியது.

ஜூலை 10-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பிக்கும் நடைமுறை நிறைவடைய இருந்த நிலையில், மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர் கோரிக்கையை ஏற்று, விண்ணப்பிப்பது வரும் 12-ம் தேதி மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 27,000 பேரும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு சுமார் 13,000 பேரும் என மொத்தம் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை விண்ணப்பத்துள்ளனர்.

இந்த நிலையில், விண்ணப்பப்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. சமர்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு வரும் 16ஆம் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படவுள்ளது. அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்த பிறகு தமிழகத்தில் கலந்தாய்வு தொடங்கவுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com