இன்று உலக ரோஜா தினம்!

world rose day
world rose day

லகெங்கும் இன்றைய தினம் சர்வதேச ரோஜா தினமாக கடைபிடிக்கப் படுகிறது. மேலும் இன்றைய நாள் புற்று நோயாளிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகவும் அனுசரிக்கப் படுகிறது.

புற்று நோயாளிகள் மனதில் உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் தன்னம்பிக்கையும் ஏற்படுத்தும் வகையில் இன்று அவர்களுக்கு ரோஜாப் பூக்களை அளிப்பது வழக்கமாக உள்ளது.

rose images
rose images

இன்றைய நான் கனடா நாட்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்த மெலின்டா ரோஸ் என்னும் 12 வயது சிறுமியின் நினைவாக, சர்வதேச ரோஜா தினமாக உருவாக்கப்பட்டது.

அரிய வகை புற்று நோயால் பாதிக்கப்பட்ட அச்சிறுமி, மனம் தளராமல் தன்னம்பிக்கையுடன் போராடி, மருத்துவர்கள் விதித்த கெடுவையும் தாண்டி, சில மாதங்கள் உயிர் வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com