மக்களுக்கு அடுத்த ஷாக்..! மீண்டும் ரூ.1 லட்சத்தை கடந்த தங்கம் விலை..!

Gold
Gold
Published on

தங்கம் விலையை பொறுத்தவரை ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ. 57,200 (ஒரு கிராமுக்கு ரூ. 7,150) ஆக இருந்தது. ஆனால் ஜனவரி மாதம் 22-ந் தேதி ரூ.60 ஆயிரம் என்று உயர்ந்து. அதன்பிறகு தினமும் 2000, 3000 என்று உயர தொடங்கியது. கடந்த அக்டோபர் மாதம் 17-ந் தேதி ஒரு பவுன் ரூ.97 ஆயிரத்து 600-க்கும் விற்கப்பட்டது. கடந்த 15-ந்தேதி சவரனுக்கு ரூ.1,160 உயர்ந்து இமாலய உச்சத்தை தொட்டு, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 120-க்கு விற்பனையானது.

இந்நிலையில் இன்று காலை தங்கம் விலை ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தறது. கிராமுக்கு ரூ.80 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,480-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இன்று பிற்பகலில் இரண்டாவது முறையாக தங்கம் விலை உயர்ந்தது. இதன்படி 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை பிற்பகலில் சவரனுக்கு ரூ.720 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,00,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.90 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,570-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இது, வரலாறு காணாத புதிய உச்சமாகும்.

  • 21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

  • 20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

  • 19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

  • 18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

  • 17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

வெள்ளி விலை இன்று கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.231-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 31 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.

  • 21-12-2025- ஒரு கிராம் ரூ.226

  • 20-12-2025- ஒரு கிராம் ரூ.226

  • 19-12-2025- ஒரு கிராம் ரூ.221

  • 18-12-2025- ஒரு கிராம் ரூ.224

  • 17-12-2025- ஒரு கிராம் ரூ.222

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com