ஆசிட் வீச்சினால் பார்வை இழந்தாலும் சிபிஎஸ்இ தேர்வில்  முதலிடம்!

ஆசிட் வீச்சினால் பார்வை இழந்தாலும் சிபிஎஸ்இ தேர்வில்  முதலிடம்!
Published on

உடலில் சிறு குறைபாடு என்றாலும் அடுத்து என்ன என்று கேள்வியுடன் இலக்கின்றி  மனம் வருந்துவோர் இடையில் 3 வது சிறுமியாக இருந்த போதே கயவர்கள் வீசிய ஆசிட் வீச்சினால் பார்வை பறிபோன நிலையிலும் தன்னம்பிக்கையுடன் படித்து தற்போது வெளியான சிபிஎஸ்இ 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 95.20 சதவீதம் பெற்றுள்ளார் சிறுமி காஃபி.

சிறுமியான காஃபி மூன்று வயது குழந்தையாக இருந்தபோது தன் பெற்றோருடன் ஹோலிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிய தருணத்தில் கொடூர மனம் படைந்தத மூன்று  ஆண்கள் அந்த சிறு குழந்தை மீது திராவகம் வீசிச்சென்றுள்ளனர். இதனால், தன் பார்வையை இழந்தார் சிறுமி காஃபி. தன் மகளுக்கு மீன்டும் பார்வை பெற்றுதர ஆறு ஆண்டு நாடு முழுவதும் உள்ள கண் மருத்துவமனைகளில் ஏறி இறங்கியுள்ளனர் காஃபியின் பெற்றோர்.

  இந்த நிகழ்விற்குப் பின் காஃபியின் குடும்பம் சொந்த ஊரான ஹிசாரிலிருந்து வெளியேறியது. குடும்ப வருமானத்துக்காக அவரின் தந்தை இரும்புக கடை ஒன்றை நடத்தி வந்ததுடன் காஃபி யையும் பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்துள்ளார். ஆசிட் வீசிய மூவருக்கும் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

 “நம் வாழ்க்கையில் எல்லாம் முடிந்து விட்டதாக உணரும் தருணங்கள் உள்ளன .எனக்கும் அப்படித்தான் இருந்தது . ஆனால் என் பெற்றோர் நம்பிக்கையை இழக்கவில்லை. எனக்கு எது நடந்தாலும் நான் மதிப்பு மிகுந்த பெண்ணாகவே வாழ்வேன் என்பதை நிரூபித்து உள்ளேன் .என் மீது பெற்றோர் வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றி விட்டேன் .அடுத்து என் இலக்கு  ஐஏஎஸ் ஆக வேண்டும் .அதற்காக பாடுபடுவேன்” .என்கிறார் இந்த சாதனைப் பெண் காஃபி.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com