சீனாவின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் முதல் இடத்தில் உள்ளவர் பாட்டில் தண்ணீர் முதல் குளிர்பானங்கள் வரை விற்கும் நிறுவனத்தின் ஓனர் ஆவார்.
ஒவ்வொரு ஆண்டின் முடிவில் பணக்காரர்கள் பட்டியல் வெளியாகும். இந்த ஆண்டு நவம்பர் மாதம் வந்துவிட்டது. இன்னும் ஒரு மாதத்தில் இந்த ஆண்டே முடிந்துவிடும். அந்தவகையில் சீன நாட்டின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது.
முதல் இடத்தில் நோங்ஃபு ஸ்பிரிங் நிறுவனத்தின் நிறுவனர் ஸோங் ஷான்ஷன் இருக்கிறார். இவர் பாட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை செய்கிறார். இவர் தொடர்ந்து நான்காவது ஆண்டாக முதலிடத்தில் தொடர்கிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 50.8 பில்லியன் அமெரிக்க டாலராகும்.
அதேபோல் இரண்டாவது இடத்தில் டென் சென்ட் ஹோல்டிங் (Tencent Holdings) நிறுவனத்தின் தலைவர் மா ஹுவாடெங் (Ma Huateng) இருக்கிறார். இந்த நிறுவனம் ஒரு பன்னாட்டு தொழில்நுட்ப குழுமமாகும். டென் சென்ட் நிறுவனத்தின் நிறுவனர்களுள் ஒருவரான மா ஹூவாடெங்கின் சொத்து மதிப்பு 46.8 மில்லியன் டாலர்கள் ஆகும். நடப்பாண்டில் இவரது சொத்து மதிப்பில் 14.7 பில்லியன் டாலர் சேர்ந்துள்ளதாம்.
மூன்றாம் இடத்தில் டிக் டாக் செயலி உரிமையாளர் ஸாங் யெமிங் ( Zhang Yeming ) 45.6 பில்லியன் டாலர்களோடு இருக்கிறார். இவர் மூன்றாம் இடத்திற்கு வருவதற்கு காரணம் பல நாடுகளில் டிக் டாக் செயலி தடை விதிக்கப்பட்டதுதான். நமது நாட்டிலும் ஒரு கட்டத்தில் மிகவும் பிரபலமாக இருந்த டிக் டாக் பிற்காலத்தில் தடை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நான்காம் இடத்தில் Pinduoduo ஈகாமர்ஸ் நிறுவன உரிமையாளர். இவரது சொத்து மதிப்பு 43.9 மில்லியன் டாலர்கள் ஆகும்.
அந்தவகையில் ஒட்டுமொத்த சீன பணக்காரர்களின் சொத்து மதிப்பு 1 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்களை கடந்திருப்பதாக போப்ஸ் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. இதற்கு காரணம் சீன பங்குச் சந்தை மந்த நிலையிலிருந்து மீண்டு வந்ததுதான் என்று சொல்லப்படுகிறது.