
டொரோன்டோவில் வீடுகளுக்கான வாடகை விண்ணை முட்டும் அளவு உயர்ந்துவிட்டதால் ஒரு பெண் நூதனமான முறையில் தனது படுக்கையில் பாதியை வாடகைக்கு விட்டுள்ளார்.
கடந்த மாதம் டொரோன்டோவை அடிப்படையாக்க் கொண்டு செயல்படும் ரியல் எஸ்டேட் நிறுவனமான அன்யா எட்டிங்கர் பேஸ்புக் மூலம் ஒரு விளம்பரம் கொடுத்தது. அதில் யாரோ ஒருவர் தனது படுக்கையில் பாதியை மாதம் 900 கனடா நாட்டு டாலர் மதிப்புக்கு (இந்திய மதிப்பில் ரூ.54,790) வாடகைக்கு விடத் தயாராக இருப்பதாக குறிப்பிடப்பட்டது.
“மாஸ்டர் பெட் ரூமில், படுக்கையில் பாதியை பகிர்ந்துகொள்ள ஒரு பெண்ணைத் தேடுகிறேன். நானும் இதேபோல இதற்கு முன்னதாக பேஸ்புக் மூலம் அறிமுகமான பெண்ணுடன் படுக்கையைப் பகிர்ந்து கொண்டேன். அது எனக்கு சரியாக இருந்தது” என்று இப்போது அழிக்கப்பட்ட அந்த பேஸ்புக் பதிவில் கூறப்பட்டிருந்தது.
வாடகைக்கு விடப்படும் என்ற தலைப்பில் டவுன்டவுன் காண்டோவில் ஏரியை நோக்கிய வீட்டில் படுக்கை பகிர்ந்து கொள்ளப்படும். மாத வாடகை 900 கனடியன் டாலர் (ரூ.54,000) என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த பதிவைப் பார்த்த ரியல் எஸ்டேட் நிறுவனர் எட்டிங்கர் அதிர்ச்சி அடைந்தார். டொரோன்டோ மார்க்கெட் ஒன்றும் அவ்வளவு மோசமாக இல்லை. படுக்கைக்கு 900 கனடா டாலர் வாடகையா? இதை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றார்.
இங்கே நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்பதை காட்டுகிறது. நகரில் தங்க வேண்டும் என்பதில் மக்கள் உறுதியாக இருக்கிறார்கள். இதுபோன்ற விஷயங்களுக்கு மார்க்கெட் உள்ளது என்று விளம்பரம் கொடுத்த பெண் கூறினார். டொரோன்டோவில் வீடுகளுக்கான நெருக்கடியை விளக்கும் இந்த விடியோ வைரலானது.
இதை பார்த்த ஒருவர் படுக்கையை பகிர்வதாக பட்டியலிடுவது அபத்தமானது மட்டுமல்ல, இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் அந்த பெண் மாற்று வழியைத் தேடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர் தனிமைக்கு மருந்து இதுதான் என்று கூறியுள்ளார்.
கனடாவில் டொரோன்டோ நகரில் வசிப்பது அதிக செலவு பிடிக்கும். அங்கு ஒரு படுக்கை அறை கொண்ட வீட்டுக்கு மாத வாடகை என்ன தெரியுமா? 2,614 கனடா டாலர். அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,17,870. இதனால்தான் மக்கள் வேறு வழியைத் தேடுகின்றனர். செலவைக் குறைக்க படுக்கையைப் பகிர்ந்து கொள்கின்றனர். இன்னொருவருடன் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் செலவும் அதிகரித்து வருகிறதாம்.
2021 ஆம் ஆண்டு சிட்னி மற்றும் மெல்போர்னில் படிக்கும் சர்வதேச மாணவர்கள் 7,000 பேரிடம் நடத்திய கருத்துக் கணிப்பில் 3 சதவீதம் பேர் வாடகைச் செலவுகளை குறைக்க அல்லது வாடகை பணத்தை சேமிக்க “ஹாட் பெட்” (படுக்கையை பகிர்ந்து கொள்ளும்) வழியை பின்பற்றி வருகிறார்களாம்.