பிக்பாஸ் தாமரை வீட்டில் நேர்ந்த சோக சம்பவம்!
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் வெளியான பிக் பாஸ் 5 வது சீசனில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் தாமரை. இவர் சிறுவயது முதலே, குடும்பத்தின வறுமை காரணமாக, மேடை நாடக கலைஞராக வேலைபார்த்து செய்தார்.
திடீரென அவருக்கு பிக் பாஸ் அழைப்பு வரவே, பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். ஆரம்பத்தில் அவரைப் பற்றி யாருக்கும் அதிகமாகத் தெரியாது. மேடைக் கலைஞரான இவர் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து சில நாட்கள் வெள்ளந்தியாக ஒன்றும் தெரியவதாராக இருந்து வந்தாலும், நாட்கள் செல்லச் செல்ல போட்டியைப் புரிந்துகொண்டு திறமையாக விளையாடி மக்கள் மனதிலும் இடம்பிடித்தார்.
மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து, 91 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டிலேயே இருந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடித்து பிரபலமானாலும், இவரது குடும்பம் இன்னும் சற்று வறுமையில்தான் உள்ளது. இந்த சூழ்நிலையைப் புரிந்துகொண்ட தொகுப்பாளரும் இசையமைப்பாராளருமான ஜேம்ஸ் வசந்தன், பலரின் உதவியுடன் தாமரையின் பெற்றோருக்கு ஒரு வீட்டு கட்டிகொடுக்க முன்வந்தார்.

அதன் வேலைகளும் தற்போது முடிவுறும் கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்நிலையில், தாமரை செல்வியின் தந்தை காலமாகியுள்ளார். இச்செய்தியை அறிந்த ரசிகர்கள் தாமரை செல்விக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
