திருமண மண்டபத்தில் நடந்த சோகம்!

திருமண மண்டபத்தில் நடந்த சோகம்!
Published on

கன்னியாகுமரி மாவட்டம் வேர்க்கிளம்பி அருகே, திருமணத்திற்கு சென்றிருந்தபோது செப்டிக் டேங்க் உடைந்து விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார்.

வேர்க்கிளம்பி ஒட்டலிவிளையில் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, முதலார் பகுதியைச் சேர்ந்த சுஜிஜா மற்றும் அவரது கணவர் மோகன்தாஸ் இருவரும் சென்றுள்ளனர். அப்போது திருமண மண்டபத்தின் பக்கவாட்டின் வழியாக சென்றபோது செப்டிக் டேங்க் உடைந்து விழுந்ததால், மோகன்தாஸ், அவரது மனைவி சுஜிஜா இருவரும் அதில் விழுந்துள்ளனர்.

இதையடுத்து, அங்குள்ளவர்கள் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்ததின் பேரில், குலசேகரம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்துள்ளனர். ஆனால் எதிர்பாராதவிதமாக தீயணைப்பு வண்டியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அருகே சென்ற கால்வாயில் விழுந்தது.

இந்நிலையில், உடனடியாக தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், தக்கலை தீயணைப்புத் துறையினர் செப்டிக் டேங்க் இடர்பாடுகளில் மாட்டிக்கொண்ட இருவரையும் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 48 வயதான சுஜிஜா இடர்பாடுகளுக்கிடையே சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது கணவர் மோகன்தாஸ் காயங்களுடன் மீட்கப்பட்டார்.

இதுகுறித்து திருவட்டார் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவரும் நிலையில், திருமண மண்டபத்தில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com