ரயில் பயணத்தில் திடீர் நெஞ்சுவலியா? 139 எண்ணுக்கு கூப்பிடுவதற்கு முன் நீங்கள் செய்ய வேண்டியவை..!

ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் போது திடீரென மருத்துவ அவசரநிலை (medical emergency) ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் வாங்க.
ரயில் பயணம்
medical emergency in train|ரயில் பயணம்AI Image
Updated on

இந்தியாவில் முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருப்பது ரெயில் சேவை. அந்த வகையில் இந்திய ரெயில்வே நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரெயில்களை இயக்குகிறது, இதில் தினமும் கோடிக்கணக்கான பயணிகள் பயணிக்கின்றனர். பெரும்பாலானோர் நீண்ட தூர பயணங்களுக்கு பெரும்பாலும் ரெயில்களில் பயணிக்கவே விரும்புகின்றனர். குறிப்பாக பாதுகாப்பான பயணம், களைப்பின்றி தூக்கிக்கொண்டு பயணம் செய்வது, டாய்லெட் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் உள்ளதால் லட்சக்கணக்கான பயணிகள் ரெயிலில் பயணம் செய்வதையே விரும்புகின்றனர்.

அந்த வகையில் நீங்க அடிக்கடி வெளியூர் பயணம் மேற்கொள்பவராக இருந்தால் குறிப்பாக ரெயில் பயணம் மேற்கொள்பவராக இருக்கும் பட்சத்தில் திடீரென மருத்துவ அவசரநிலை (medical emergency) ஏற்படும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது நல்லது. மேலும் அடிக்கடி ரயில் பயணம் செய்பவர்களுக்கு இந்த குறிப்புகள் மிகவும் உபயோகமாக இருக்கும்.

ரெயில் பயணத்தில் போது உங்களுக்கு அல்லது உங்களுடன் வருபவருக்கோ அல்லது அருகில் இருப்பவருக்கோ ஏதாவது medical emergency ஏற்பட்டால் அதாவது, மாரடைப்பு, கடுமையான ரத்தப்போக்கு அல்லது சுயநினைவின்மை அல்லது பிரசவ வலி போன்ற உண்மையான அவசரநிலைகளின்போது எப்போது 'அலாரம் செயின்' (alarm chain) இழுக்க அனுமதிக்கப்படுகிறது.

ஆனாலும் சில சமயங்களில் 'அலாரம் செயின்' இழுப்பது medical emergencyஐ மேலும் மோசமாக்கும் என்பதால் அதற்கு முன் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம் வாங்க...

எவ்வித பயணம் என்றாலும் அதில் சிலருக்கு உடல்நல பாதிப்புகளும் ஏற்படுவது உண்டு. நெடு நாட்களாக இருக்கும் உடல் உபாதைகளுக்கு அவரவர் கைகளில் மருந்துகளை எடுத்துச் சென்றாலும் ரெயிலில் செல்லும்போது திடீரென ஏற்படும் உடல் நல பாதிப்புகளுக்கு என்ன செய்வதென்றே தெரியாமல் பயணிகள் விழிப்பதுண்டு.

நீங்க ரெயிலில் பயணம் மேற்கொள்ளும் போது திடீரென உங்களுக்கோ அல்லது உங்கள் அருகில் இருப்பவருக்கே medical emergency ஏற்பட்டால் உடனே பதற்றம் அடையாமல் (panic) முதலில் நீங்கள் டிக்கெட் பரிசோதகரை (TTE) அல்லது ரயில்வே ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கவும்.

அவரிடம் அங்கு இருக்கக்கூடிய பிரச்சனையை விவரிக்கும் பட்சத்தில் அவர், medical emergency ஏற்றபடி அங்குள்ள நிலைமையை சரிசெய்ய என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து முடிவெடுப்பார்.

ரயில் பயணம்
medical emergency in train|ரயில் பயணம்AI Image

மற்றும் ரெயிலில் உள்ள முதலுதவி பெட்டியை (First-Aid Box) தருவார்கள். மேலும் TTE-கள் ரெயிலில் பயணிக்கும் மருத்துவர்களின் உதவியை நாட முடியும். அல்லது அடுத்தடுத்து வரும் பெரிய ரெயில் நிலையங்களில் மருத்துவர்கள் மற்றும் ஆம்புலன்ஸ் தயார் நிலையில் இருக்குமாறு செய்வார்கள்.

அனைத்து பயணிகள் ரெயில்களிலும் அத்தியாவசிய மருந்துகள் மற்றும் காயக்கட்டுப் பொருட்கள் அடங்கிய முதலுதவிப் பெட்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

அடுத்து 139 என்ற ரெயில்வே பாதுகாப்புப் படை உதவி எண்ணுக்கு (Railway protection force helpline) போன் செய்து பதட்டமின்றி உங்களுடைய பெயர், PNR எண், ரெயில் எண் மற்றும் இருக்கும் பெட்டி (Coach) எண் ஆகியவற்றை சொல்லி, பாதிக்கப்பட்டவரின் தற்போதுள்ள நிலைமை என்ன என்பது குறித்து நீங்கள் தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பட்ஜெட் 2026: மூத்த குடிமக்களுக்கு காத்திருக்கும் குட் நியூஸ்! மீண்டும் வரப்போகுதா ரெயில் சலுகை..?
ரயில் பயணம்

ஏனெனில் நோயாளியின் நிலைமையை புரிந்து கொண்டு அதன் அடிப்படையில் அடுத்த ஸ்டேஷனில் அவருக்கு ஏதாவது medical emergency ஏற்பாடு செய்ய முடியும் என்றால் அதற்கு ஏற்ப அவர்கள் உங்களுக்கு ஆலோசனை வழங்குவார்கள்.

ஏனெனில் ஒரு சில ஸ்டேஷன்களில் அங்கேயே அவசர மருத்துவச் சிகிச்சை வசதி (medical emergency facility) இருக்கும். அப்படி இல்லையென்றாலும் அடுத்தது ஆம்புலன்சுக்கு தகவல் சொல்வது அல்லது அதுபோன்ற அவசர நிலைக்கு வேறு ஏதாவது ஏற்பாடுகள் செய்வதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இந்த நேரத்தில் நீங்கள் பயணிக்கும் கோச்சில் மருத்துவர் யாராவது இருக்கிறார்களா என்பதையும் கேட்டு தெரிந்து கொண்டு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக முதலுதவி செய்யலாம்.

மற்றொரு வழிமுறையும் உள்ளது. அதாவது RailMadad என்ற செயலியிலும் பாதிக்கப்பட்டவரின் தகவல்களை எல்லாம் பதிவு செய்து தற்போதுள்ள சூழ்நிலையை விளக்கினால், அவர்களும் சீக்கிரமாக அந்த பிரச்சனைக்கு தீர்வு கொடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

நிறைய பேர் இதுபோன்ற அவசர நிலை ஏற்படும் போது என்ன செய்வது என்று தெரியாமல் பதற்றத்தில் அபாய சங்கிலியை (alarm chain)பிடித்து இழுத்து விடுவார்கள். ரெயில் எந்த இடத்தில் இருக்கிறது என்று தெரியாத பட்சத்தில், அதாவது அது தொலைதூரப் பகுதியாக (remote area) இருக்கலாம். அதனாலேயே கூட பாதிக்கப்பட்டவரின் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பதால் அதை கண்டிப்பாக நீங்க செய்யாதீங்க.

இதையும் படியுங்கள்:
ரயிலில் ஓசியில் பயணிப்போருக்கு ஷாக் நியூஸ்: அபராதத்தை அதிரடியாக உயர்த்திய ரெயில்வே நிர்வாகம்..!!
ரயில் பயணம்

அதேசமயம் நீங்கள் பயணம் செய்யும் செய்யும் ரெயில் கிட்டத்தட்ட நகரத்தின் பக்கத்தில் தான் இருக்கிறது என்று தெரியவந்தால் real emergency-ல் அபாய சங்கிலியை பிடித்து இழுக்க முடியும்.

logo
Kalki Online
kalkionline.com