தவறா பணம் அனுப்பிட்டீங்களா?இனி பீதி அடைய வேண்டாம்... எளிதாக திரும்பப் பெறலாம்..!

தவறான வங்கிக் கணக்கு அல்லது UPI ஐடிக்கு உங்களது பணம் மாற்றப்பட்டதா? பீதி அடைய வேண்டாம், உங்களது பணத்தை எளிதாகத் திரும்பப் பெறலாம். எப்படி தெரியுமா?...
UPI
UPI
Published on

இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சி முன்னேற்றத்தைக் கண்டு வரும் நிலையில், பெரும்பாலான மக்கள் யுபிஐ முறையில் பணத்தைப் பரிமாற்றம் செய்து வருகின்றனர். பணக்காரர்கள் முதல் கடைக்கோடி மக்கள் வரை யுபிஐ மூலமே பணப்பரிவர்த்தனையை மேற்கொண்டு வருகின்றனர். யுபிஐ பரிவர்த்தனை (Unified Payments Interface transaction) என்பது, ஸ்மார்ட்போன் வழியாக வங்கிக் கணக்குகளுக்கு இடையே உடனடியாக பணத்தை அனுப்பவும், பெறவும், பில்கள் செலுத்தவும், ஆன்லைன் ஷாப்பிங் செய்யவும் இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தால் (NPCI) உருவாக்கப்பட்ட ஒரு டிஜிட்டல் கட்டண அமைப்பாகும். ஒரே மொபைல் செயலி மூலம் பல வங்கிக் கணக்குகளை இணைத்து, எளிதாகப் பணப் பரிமாற்றங்களை மேற்கொள்ள இது உதவுகிறது.

அந்த வகையில் யுபிஐ பரிவர்த்தனை மூலம் பணம் அனுப்பும் போது கூடுதல் கவனமாக இருக்க முயற்சித்தாலும் சில சமயங்களில் எதிர்பாராத விதமாக தவறுகள் நடக்கும். அப்படி நீங்கள் தவறுதலாக தவறான வங்கிக் கணக்கிற்கோ அல்லது UPI ஐடிக்கோ பணம் அனுப்பி விட்டால் உங்களது பணம் திரும்ப கிடைக்க உடனடியாக என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து அறிந்து கொள்ளலாம்.

நீங்கள் Google Pay, PhonePe, Paytm அல்லது BHIM ஐ பயன்படுத்தி தவறுதலாக வேறு UPI ஐடிக்கு பணப்பரிமாற்றம் செய்திருந்தால், உடனடியாக வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு உங்கள் புகாரை பதிவு செய்ய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
யுபிஐ யூசர்களுக்கு டபுள் குட் நியூஸ்! UPI-ல் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை..!
UPI

புகாரை பதிவு செய்யும் போது நீங்கள் யாருக்கு பணம் பரிவர்த்தனை செய்தீர்களோ அதன் ரசீது, பரிவர்த்தனை ஐடி, UTR எண், அனுப்பப்பட்ட தொகை, அனுப்பியவர் மற்றும் பெறுநர் UPI ஐடிகள், பரிவர்த்தனை செய்த தேதி மற்றும் தொகை போன்ற விவரங்களை NPCIல் பதிவு செய்து பணத்தைத் திரும்பப்பெற கோரிக்கை வைக்க வேண்டும்.

மேலும் NPCI வலைத்தளத்திற்கு சென்றும் அனைத்து விவரங்களையும் பதிவு செய்து புகார் செய்யலாம். உங்கள் புகார் மீது NPCI விசாரித்து நீங்கள் சொல்வது உண்மை என்று கண்டறியப்பட்டால், உங்கள் பணத்தைத் திருப்பித் தருமாறு வங்கிக்கு அறிவுறுத்தும்.

தவறான UPI பரிவர்த்தனை புகாரை எவ்வாறு பதிவு செய்வது என்று அறிந்து கொள்ளலாம்...

* உங்கள் UPI செயலி மூலம் இந்த புகாரை பதிவு செய்யலாம். Google Pay, PhonePe, Paytm அல்லது BHIM போன்ற பெரும்பாலான UPI செயலிகளில் “Help” or “Report a Problem” என்ற சேவை இருக்கும்.

உங்கள் UPI செயலியில் transaction history சென்று wrong transaction என்பதை தேர்வு செய்து “Raise a Complaint” or “Report” என்ற ஆப்ஷனை கிளிக் செய்து “Wrong UPI Transaction” என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து தேவையான அனைத்து விவரங்களையும், அதாவது பரிவர்த்தனை ஐடி, தேதி, தொகை மற்றும் UPI ஐடி பதிவு செய்ய வேண்டும்.

* உங்கள் UPI செயலி மூலம் உங்களது புகார் தீர்க்கப்படாவிட்டால், உங்கள் வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ளவும் அல்லது உங்கள் வங்கிக்கு நேரடியாக சென்றும் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். வங்கியில் புகார் செய்யும் போது பரிவர்த்தனை ஐடி, தேதி, தொகை மற்றும் UPI ஐடி போன்ற விவரங்களை கொடுக்க வேண்டும்.

* 1800-120-1740 என்ற NPCIயின் கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும் நேரடியாகப் புகாரளிக்கலாம்.

* நீங்கள் அளித்த புகார் 30 நாட்களுக்குள் தீர்க்கப்படாவிட்டால், NPCI இணையதளத்தில் தகராறு தீர்வு வழிமுறை பிரிவின் கீழ் மீண்டும் ஒருமுறை உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

மறுமுறை நீங்கள் புகாரை பதிவு செய்யும் போது பரிவர்த்தனை ஐடி, UTR எண், அனுப்பப்பட்ட தொகை, அனுப்பியவர் மற்றும் பெறுநர் UPI ஐடிகள் போன்ற விவரங்களை வழங்க வேண்டும். இவை அனைத்தையும் சமர்ப்பித்த பிறகு, உங்களுக்கு புகார் குறிப்பு எண்ணைப் (complaint reference number) கொடுக்கப்படும்.

இதையும் படியுங்கள்:
UPI ஐடி-யை மாற்றி உங்கள் தனிப்பட்ட ரகசியத்தைப் பாதுகாப்பது எப்படி? முழு விவரம்..!
UPI

அதன் அடிப்படையில் உங்களது புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நீங்கள் பணம் இழந்தது உண்மை எனக் கண்டறியப்பட்டால் உங்களது பணம் விரைவில் திரும்ப கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com