கமலை வென்றதில் மீண்டும் மகிழ்ச்சி:  வானதி ட்வீட்!

கமலை வென்றதில் மீண்டும் மகிழ்ச்சி:  வானதி ட்வீட்!

டிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி, வசூலில் வாரிக் குவித்து வருகிறது. இந்நிலையில் இப்படத்தை பார்த்து பிஜேபி எம்.எல்.ஏ-வான வானதி சீனிவாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான வானதி சீனிவாசன், தன்  குடும்பத்தினருடன் 'விக்ரம்' படத்தை பார்த்து ரசித்த புகைப்படத்தை டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில் அவர் பதிவிட்டதாவது:

கம்லஹாசனின் 'விக்ரம்' படத்தை கண்டு ரசித்தேன். உங்கள் கலைப் பணியால் தொடர்ந்து மக்களை மகிழ்விக்க வாழ்த்துக்கள். கடந்த சட்டமன்றத் தேர்தல் களத்தில் உங்களை வெற்றி பெற்றதற்கு மீண்டும் ஒரு முறை மகிழ்கிறேன்.

-இவ்வாறு வானதி சீனிவாசன் தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் தனது 'மக்கள் நீதி மய்யம்' கட்சி சார்பாக கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி வாய்ப்பை பிஜேபி-யின் வானதி சீனிவாசனிடம் பறி கொடுத்தர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற ஐந்து மொழிகளில் விக்ரம் படம் வெளியாகியுள்ளது. நடிகர் கமல்ஹாசன் தனது  'மக்கள் நீதி மய்யம்' கட்சியை தொடங்கிய பிறகு வெளியான இரண்டாவது திரைப்படம் விக்ரம் என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி, மாநகரம், மாஸ்டர் ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். விக்ரம் திரைப்படம் இதுவரை ரூ.400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com