45 துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய தம்பதி!

45 துப்பாக்கிகளுடன் வந்திறங்கிய தம்பதி!
Updated on

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் 45 துப்பாக்கிகளுடன் வியட்நாமில் இருந்து ஒரு தம்பதியர் வந்திறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

-இதுகுறித்து டெல்லி விமான நிலை சுங்கத் துறை அதிகாரிகள்  தெரிவித்ததாவது:

வியட்நாமிலிருந்து புறப்பட்டு இன்று காலையில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு ஜகஜித் சிங் மற்றும் அவரது மனைவி ஜஸ்வீந்தர் கவுர் ஆகியோர் விமானத்தில் வந்திறங்கினர். 

அந்த தம்பதியரின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் பரிசோதனை செய்தனர். அப்போது அவர்கள் கொண்டு வந்த டிராலி பேக்கில் 45 கடத்தல் துப்பாக்கிகள் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடிக்கப் பட்டது. இதையடுத்து உடனடியாக தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது.

இதையடுத்துதையடுத்து டெல்லி விமான நிலையம் வந்த தேசிய புலனாய்வு ஏஜென்சி போலீசார் அந்த தம்பதியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 45 துப்பாக்கிகளின் மதிப்பு ரூ.22 லட்சம் என்று கணக்கிடப் பட்டுள்ளது. இந்த விவாகரம் குறித்த மற்ற தகவல்கள் முழு விசாரணைக்குப் பிறகே தெரிய வரும்.

-இவ்வாறு சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com