பாரதியார் பாடலைப் பாடிய வடமாநில சிறுமிகள்; பிரதமர் பாராட்டு!

 பாரதியார் பாடலைப் பாடிய வடமாநில சிறுமிகள்; பிரதமர் பாராட்டு!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பாரதியாரின்  'பாருக்குள்ளே நல்ல நாடு' என்னும் பாடலை பாடிய அருணாச்சல பிரதேசத்தை சேர்ந்த சிறுமிகளை பிரதமர் மோடி தன் டிவிட்டர் பதிவில் தமிழில் பாராட்டியுள்ளார்

''இந்த வீடியோவை கண்டபோது பெருமகிழ்ச்சியும் உவகையும் கொண்டேன்'' என்று அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மகாகவி பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பல்வேறு சமயங்களில் பேசி வருகிறார். மேலும் மகாகவி பாரதியார் நூற்றாண்டை ஒட்டி சுப்ரமணிய பாரதியார் பெயரில் பனாரஸ் பல்கலைக்காகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று அறிவித்தார்.  

இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தின் முதல்வர் பிரேம கண்டு பதிவிட்டுள்ள வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி ரிட்விட் செய்துள்ளார்.  

அந்த வீடியோவில் அருணாச்சல் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள், மகாகவி சுப்பிரமணிய பாரதியின் 'பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் பாரத நாடு' என்னும் பாடலை பாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com