மல்லிகை விவசாயிகளை அச்சுறுத்தும் சிவப்பு தட்டு !

மல்லிகை விவசாயிகளை அச்சுறுத்தும் சிவப்பு தட்டு !
Published on

திருச்சி மாவட்டம் அந்தநல்லூர், மணிகண்டன் மற்றும் வையம்பட்டி ஆகிய பகுதிகளில் சுமார் 900 ஹெக்டேர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி செய்யப்படுகிறது. இந்தப் பகுதிகளின் பிரதான விவசாயமாக மல்லிகை விவசாயி அமைந்துள்ளது.தற்போது மல்லிகையின் பின்புறத்தில் சிகப்பு தட்டு உருவாகி வருகிறது. இந்த நோயின் காரணமாக மல்லிகை விவசாயம் பெருமளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.

ஒரு ஏக்கர் பரப்பளவில் 40 கிலோ கிடைக்க வேண்டிய மல்லிகை சிகப்பு தட்டு நோயின் காரணமாக தற்போது 25 கிலோ மட்டுமே கிடைக்கிறது. இதனால் மல்லிகை விவசாய மிகப்பெரிய சரிவை கண்டிருக்கிறது. மேலும் மல்லிகை விவசாயத்திற்கு கூலி அதிகம், ஒரு ஏக்கர் பரப்புக்கு 10 பேரை வேலைக்கு அமர்த்த வேண்டும் இத்தனை சுமைகளுக்கு மத்தியில் சிகப்பு தட்டு பிரச்சினை பெரும் சுமையாக மாறி இருப்பதாக விவசாயிகள் வேதனையோடு கூறினார்.

மேலும் சிவப்பு தட்டு நோயை குறைக்க தற்போது வழங்கப்படும் பூச்சிக்கொல்லியை வாங்க நான்கு நாட்களுக்கு நான்காயிரம் ரூபாய் செலவாகிறது. அதைப் பயன்படுத்தியும் பெருமளவில் பயன் தருவதில்லை என்றும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். அதே சமயம் அதற்கு மாற்றாக சிகப்பு தட்டை குணப்படுத்தும் பூச்சிக்கொல்லி தற்போது இருப்பதாக தோட்டக்கலை துறை கூறியிருக்கிறது.

சிகப்பு தட்டு பிரச்சனையிலிருந்து விவசாயிகளை காப்பாற்ற முயற்சி எடுக்கும் அதே நேரத்தில் திருச்சி மாவட்ட மல்லிகை விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான அந்தநல்லூர் அல்லது மணிகண்டம் சுற்று வட்டார பகுதியில் நறுமண தொழிற்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com