பாஜகவிலிருந்து விலகுகிறார் திருச்சி சூர்யா!

surya - daisy
surya - daisy
Published on

பிஜேபி உடனான தன்னுடைய உறவை முடித்துகொள்வதாக திமுக நாடளுமன்ற உறுப்பினரின் மகன் திருச்சி சூர்யா அறிவித்துள்ளார்.

சமீபத்தில் திருச்சி சூர்யாவிற்கும் பாஜகவின் சிறுபான்மை பிரிவு மாநிலத் தலைவர் டெய்சி சரணுக்கும் இடையிலான ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கடந்த வாரம், திருச்சி சூர்யாவை பாஜக தலைவர் அண்ணாமலை 6 மாத காலத்திற்கு இடைநீக்கம் செய்தார்.

இது குறித்து சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில்

" அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . அடுத்து வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும் .

பாஜக தலைவர் அண்ணாமலை
பாஜக தலைவர் அண்ணாமலை

அதில், அடுத்த தேர்தலில் பாஜக இரட்டை இலக்கை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகத்தை, தமிழக பாஜக மாற்ற வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன் . உங்கள் மேல் என்றும் அன்புள்ள அன்பு தம்பி' என திருச்சி சூர்யா பதிவிட்டுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com