கட்டுப்பாட்டை இழந்த ட்ரக்! அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதிய பெரும் விபத்து!

கட்டுப்பாட்டை இழந்த ட்ரக்! அடுத்தடுத்து 48 வாகனங்கள் மோதிய பெரும் விபத்து!

நேற்றிரவு 9 மணியளவில் புனே- பெங்களூரு நெடுஞ்சாலையில் நடந்த பெரும் விபத்தில் 48 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சேதமடைந்துள்ளன.

புனேவில் நவலே பாலத்தின் அருகே ட்ரக் ஒன்று சென்றுகொண்டிருந்தபோது, டிரக்கை இயக்கிய டிரைவர் பிரேக் போட முற்பட்ட நிலையில், டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் நிலை தடுமாறியுள்ளது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த டிரக் அருகே இருந்த வாகனங்கள் மீது தாறுமாறாக மோதி விபத்துக்குள்ளானது.

நேற்று இரவு நடந்த இந்த விபத்தினால், அச்சாலையானது எண்ணெய் கசிந்து வழுவழுப்பு தன்மை கொண்டதாகவும் மாறியது. இதனால் சாலையில் சென்ற பிற வாகனங்களும் வழுக்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தைத் தொடர்ந்து கிடைத்த தகவல்படி, இதுவரை 48 வண்டிகள் விபத்துக்குள்ளானதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும், அதில் பலரும் மருத்துவ சிகிச்சை பெற்றுவருவதாகவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்தில், பல வாகனங்கள் விபத்துக்குள்ளானதையடுத்து, தீயணைப்புப் படை, காவல்துறை மற்றும் மீட்புக் குழுவினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நவலே பாலத்தில் ஏற்பட்ட இந்த விபத்தையடுத்து, மும்பை செல்லும் சாலையில் 2 கிமீ தூரத்துக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் அறியப்படுகிறது.

Other Articles

No stories found.
Kalki Online
kalkionline.com