நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு சம்பந்தம் இல்லை என்று ஒப்புக்கொண்ட ட்ரூடோ!

Justin trudeau
Justin trudeau
Published on

நிஜ்ஜார் கொலை வழக்கில் இந்தியாவை குற்றம் சாட்டிய கனடா பிரதமர் ட்ரூடோ தற்போது இந்தியா குற்றம் செய்யவில்லை என்பதை ஒப்புக்கொண்டிருக்கிறார்.

காலிஸ்தான் பிரிவினைவாதியாக இருந்த நிஜ்ஜார் இந்தியாவில் இருந்தபோது அவர் நாட்டின் ஒற்றுமைக்கு கலங்கம் விளைவிப்பதாக சொல்லி புலனாய்வு குழு மூலம் அவரை கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து அவர் இங்கிருந்து கனடாவிற்கு சென்று அங்கு குடியுரிமையும் வாங்கிக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து அவர் கொலைசெய்யப்பட்டார். இது கனடாவின் மொத்த போலீஸ் துறைக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டது. இதனால், அந்த அரசு இதனை மிகவும் தீவிரமாக விசாரிக்கத் தொடங்கியது. அந்த விசாரணையில் இந்த கொலைக்கும், இந்திய தூதரகத்திற்கும் சம்பந்தம் உள்ளதாக கனடா அரசு தெரிவித்தது. இதனை முற்றிலும் இந்திய அரசு மறுத்துவிட்டது. இதனால், கனடாவில் இருந்த இந்திய தூதரக அதிகாரியை கனடா வெளியேற்றிவிட்டது. இதையே இந்தியாவும் பதிலுக்கு செய்தது.

இதனையடுத்து இருநாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தைக்கு பின்னரே இரு நாடுகளின் தூதரக அதிகாரிகள் மீண்டும் திரும்பினர்.

ஒருவழியாக பிரச்னை முடிந்தது என்று இருந்த நேரத்தில், தற்போது மீண்டும் இது வெடித்திருக்கிறது. கனடா பிரதமர் ட்ரூடோ நாடாளுமன்றத்தில், நிஜ்ஜார் எங்கள் நாட்டு குடிமகன், அவரை இந்தியா கொன்றுவிட்டது.

இந்தியாதான் குற்றவாளி என்று கூறியதும் இந்தியாவின் சுயமரியாதை கேள்விக்குறியானது. இந்தியா பலமுறை கேட்டும் இந்த வழக்கு குறித்த எந்தவொரு சிறிய ஆதாரத்தையும் கனடா பகிர்ந்து கொள்ளவில்லை. இந்தநிலையில்தான் வெளிநாட்டு தலையீட்டு ஆணையத்தில் (Foreign Interference Commission) இந்தியா மீதான குற்றச்சாட்டை பிரதர் ட்ரூடோ முன்வைத்தார்.

இதையும் படியுங்கள்:
News 5 – (17.10.2024) வால் நட்சத்திரம் தென்படத் தொடங்கியது!
Justin trudeau

"இந்தியா மற்றும் இந்திய தூதரக அதிகாரிகளுக்கு எதிரான கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக கனடா எங்களிடம் (இந்தியாவிடம்) எந்த ஆதாரத்தையும் முன்வைக்கவில்லை." என்று இந்தியா தெரிவித்தது. இதனையடுத்து வெளியுறவு அமைச்சகம், "இந்தியா-கனடா உறவுகளுக்கு சேதத்தை ஏற்படுத்தியதற்கான பொறுப்பு பிரதமர் ட்ரூடோவுக்கு மட்டுமே உள்ளது.” என்று அறிக்கை வெளியிட்டது.

இதன்மூலம் கனடா பிரதமரின் குற்றங்களுக்கு எந்த ஆதாரமும் முன்வைக்கப்படவில்லை என்பதால், இந்தியாமீது எந்த குற்றமும் இல்லை என்பதை இறுதியாக ட்ரூடோ ஒப்புக்கொண்டுவிட்டார். ஆதாரத்தை தொடர்ந்து கேட்டு வந்த இந்தியா தற்போது ட்ரூடோவின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com