
இந்த வார தொடக்கத்தில் சீனாவின் தியான்ஜினில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) மாநாட்டை அடுத்து, இந்தியாவும் ரஷ்யாவும் சீனாவுடன் இணைந்துவிட்டதாகத் தெரிகிறது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மாநாட்டின்போது, பிரதமர் மோடி, ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் ஆகியோருக்கு இடையே வெளிப்பட்ட வலுவான நட்புறவு, குறிப்பாக மேற்கத்திய நாடுகளில் உலகளாவிய கவனத்தை ஈர்த்தது. இந்த நிகழ்வுக்குப் பிறகுதான், டிரம்ப் தனது சமீபத்திய சமூக ஊடகப் பதிவை வெளியிட்டார்.
டிரம்ப், இந்தியாவையும் அமெரிக்காவையும் மீண்டும் ஒருமுறை கடுமையாக விமர்சித்துள்ளார்.
சீனாவில் நடந்த மாநாட்டை அடுத்து, இந்தியப் பொருட்களுக்கான வரியை 50% ஆக உயர்த்தி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளைச் சீர்குலைத்த டிரம்ப், இந்தியாவுடனான வர்த்தகத்தை "ஒருதலைப்பட்சமான பேரழிவு" என்று குறிப்பிட்டுள்ளார்.
மோடி உட்படப் பல உலகத் தலைவர்கள் சீனாவின் மாநாட்டில் பங்கேற்றபோது, இந்த விமர்சனத்தை முன்வைத்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இந்தியாவுடனான வர்த்தக உறவை கடுமையாக விமர்சித்துள்ளார்.
"ஒரு சிலருக்குத்தான் இது புரியும், நாம் இந்தியாவுடன் மிகக் குறைந்த அளவிலான வர்த்தகத்தையே செய்கிறோம்.
ஆனால், அவர்கள் நம்முடன் மிகப்பெரிய அளவில் வர்த்தகம் செய்கிறார்கள்," என்று ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் தெரிவித்தார்.
அதாவது, அவர்கள் நமக்கு அதிக அளவிலான பொருட்களை விற்கிறார்கள். அவர்களுக்கு நாம்தான் மிகப்பெரிய வாடிக்கையாளர். ஆனால், நாம் அவர்களுக்கு மிகக் குறைந்த அளவிலான பொருட்களையே விற்கிறோம்.
இது முற்றிலும் ஒருதலைப்பட்சமான உறவு, பல பத்தாண்டுகளாக இது இப்படித்தான் இருந்து வருகிறது," என்றும் அவர் மேலும் கூறினார்.
ட்ரம்ப் இந்தியப் பொருட்களுக்கான வரியை 50% ஆக உயர்த்திய பிறகு, அதாவது மற்ற எந்த நாட்டையும் விட மிக அதிகமாக உயர்த்திய பிறகு, இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
அமெரிக்காவில் அதிக வரி விகிதங்களுக்கு, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
ட்ரம்ப்பின் கொள்கைகளால் இந்தியா சீனாவுக்கு நெருக்கம்: முன்னாள் அதிகாரிகள் குற்றச்சாட்டு முன்னாள் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ட்ரம்ப் இடையே ஒரு காலத்தில் இருந்த “வலுவான தனிப்பட்ட உறவு” இப்போது இல்லை என்று வியாழக்கிழமை தெரிவித்தார். ட்ரம்ப்பின் நடவடிக்கைகளால்தான் இருதரப்பு உறவுகள் பல பத்தாண்டுகள் பின்னோக்கிச் சென்றுவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
ட்ரம்ப்பின் 'வர்த்தகத் தாக்குதல்' இதேவேளையில், மற்றொரு முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் பேசுகையில், ட்ரம்ப்பின் 'மிகப்பெரிய வர்த்தகத் தாக்குதல்கள்' இந்தியாவைச் "சீனாவுடன் அமர" கட்டாயப்படுத்தியதாகக் கூறினார்.
அமெரிக்கா ஒரு "பெரிய குழப்பவாதி" என்று அதன் நட்பு நாடுகள் இப்போது கருதுவதாகவும், அதேசமயம் சீனா செல்வாக்கில் அமெரிக்காவை முந்திக்கொண்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
சல்லிவன் மேலும் கூறியதாவது: ஒட்டுமொத்தமாகப் பல நாடுகளில் அமெரிக்காவை விடச் சீனா செல்வாக்கில் முன்னணியில் உள்ளது.
ஒரு வருடத்திற்கு முன்பு இது இப்படி இல்லை. இப்போது பல நாடுகள் அமெரிக்காவின் மதிப்பு குறைந்துவிட்டதாகக் கூறுகின்றன, அதேசமயம் சீனா ஒரு பொறுப்புள்ள நாடாகத் தெரிகிறது.
உலக அரங்கில் சீனா பொறுப்புள்ள நாடாகத் தெரிகிறது, ஆனால் அமெரிக்காவின் மதிப்பு மிகவும் குறைந்துவிட்டது என்றும் சல்லிவன் குறிப்பிட்டார்.