இனி 10 ஆண்டுகளுக்கு பைக் ஓட்டக்கூடாது.. டிடிஎஃப் வாசனுக்கு ஆப்பு வைத்த கோர்ட்!

டிடிஎஃப் வாசன்
டிடிஎஃப் வாசன்

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆன்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

பிரபல யூடியூபர் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. உத்தரவிட்டுள்ளார்.

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசம் செய்ய முயன்றபோது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், அவரின் வலது கையில் எலும்பு முறிந்து, பல இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. பைக் ரைடர்கள் போடும் கோட்டை போட்டிருந்ததால் நல் வாய்ப்பாக சிறு காயங்களோடு உயிர் தப்பினர்.

இது தொடர்பான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காயமடைந்த டிடிஎப் வாசனுக்கு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. 

இதையடுத்து பாலுசெட்டி சாத்திரம் காவல் துறையினர், டிடிஎஃப் வாசன் மீது, பொது மக்களின் உயிருக்கு ஆபத்து உண்டாக்குவது, பிறருடைய பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிப்பது என இரு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், ஜாமீனில் வெளிவர முடியாத அளவுக்கு வாசன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து  டிடிஎஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தமிழக போக்குவரத்துத்துறை பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில்தான் டி.டி.எஃப் வாசனின் ஓட்டுநர் உரிமத்தை 10 ஆண்டுகளுக்கு ரத்து செய்து காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ. இன்று உத்தரவிட்டுள்ளார். அதாவது, 2033ஆம் ஆண்டு வரை அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com