"தயவு செய்து பெற்றோர்களை இப்படி கொண்டு வந்து நிறுத்தாதீர்கள்" டிடிஎஃப் வாசன் அம்மா!

டிடிஎஃப் வாசன் தாய்
டிடிஎஃப் வாசன் தாய்

டிடிஎஃப் வாசன் பல போராட்டங்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவரது தாய் இளைஞர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரபல யூடியூப்பர் டிடிஎஃப் வாசன் பைக் சாகசங்கள் செய்து இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்டானவர். இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். சமீபத்தில் இவரை காண குவிந்த இளைஞர்கள் கூட்டத்தால் போலீசாரே திணறினர். இதனை தொடர்ந்து டிடிஎஃப் வாசன் தனது ரசிகர்களின் முகத்தை முதுகில் டாட்டூவாக போட்டு கொண்டார்.

இப்படி கெத்து காட்டி சுற்றி வந்த டிடிஎஃப் வாசனுக்கு பட வாய்ப்பும் கிடைத்தது. அதோடு வாழ்க்கையை நடத்தி செல்லாமல் மீண்டும் பைக் சாகசம் செய்கிறேன் என விபத்தில் சிக்கி கொண்டார் டிடிஎஃப் வாசன். பல முறை எச்சரித்தும் மீண்டும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாகனம் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் இனி அவர் 10 ஆண்டுகள் வாகனமே ஓட்டக்கூடாது என அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்து உத்தரவிட்டனர் நீதிபதிகள். இந்த நிலையில் தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இந்த நிலையில், இவரது தாய் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் எந்த பெற்றோரையும் இப்படி கொண்டு வந்து நிறுத்தாதீர்கள். என்னிடம் பணம் இருந்ததால் என் பையனை மீட்டு விட்டேன் என கவலையாக தெரிவித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com