டிடிவி.தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட முடிவு: இன்றைய திடீர் சந்திப்பில் முடிவு!

டிடிவி.தினகரன் - ஓ.பன்னீர்செல்வம் இணைந்து செயல்பட முடிவு: இன்றைய திடீர் சந்திப்பில் முடிவு!

ம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை 7 மணியளவில் அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தார். தனது வீட்டுக்கு வந்த ஓ.பன்னீர்செல்வத்தை வாசல் வரை வந்து வரவேற்றார் டிடிவி தினகரன். இந்த சந்திப்பின்போது ஓ.பன்னீர்செல்வம் பூங்கொத்து கொடுத்து தனது அன்பை தினகரனிடம் வெளிப்படுத்தினார். அதற்கு பதிலாக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றார் தினகரன்.

முன்னதகாக, ‘சசிகலா மற்றும் தினகரனுடன் இணைந்து செயல்பட நான் தயார்’ என அறிவித்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம். சமீபத்தில் நடைபெற்ற திருச்சி மாநாட்டில்கூட சசிகலாவை, ‘சின்னம்மா‘ எனக் குறிப்பிட்டு பேசியிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். திருச்சி மாநாட்டைத் தொடர்ந்து சென்னை, விழுப்புரம், சேலம், மதுரை மற்றும் நெல்லை என அடுத்தடுத்து ஐந்து மாநாடுகளை நடத்தவும் தீர்மானித்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.

இன்று நடைபெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வம் - தினகரன் சந்திப்புக்கு அடுத்ததாக, சசிகலாவையும் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலா மற்றும் தினகரனை எதிர்த்து தர்ம யுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்புக்கு பிறகு ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி.தினகரன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய அவர்கள் அதிமுகவை மீட்ட இருவரும் இணைந்து செயல்படப்போவதாக கூட்டாக அறிவித்து இருக்கிறார்கள்.

அதிமுகவில் ஓபிஎஸ் இபிஎஸ் விவகாரம் பூதாகாரம் எடுத்த நாளிலிருந்தே அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்று கூறி வந்தார் ஓ.பன்னீர்செல்வம். இந்த நிலையில் இன்று அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் சந்தித்தித்து ஒன்றாக இணைந்து செயல்படப்போவதாக அறிவித்திருப்பது அரசியலில் பெரும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.

logo
Kalki Online
kalkionline.com