"துங்கநாத்" உலகின் மிக உயரமான சிவன் கோயில் 10 டிகிரி சாய்ந்தது!

"துங்கநாத்" உலகின் மிக உயரமான சிவன் கோயில் 10 டிகிரி சாய்ந்தது!

துங்கநாத் கோயில் உலகத்தின் மிக உயரமான இடத்தில் அமைந்த சிவன் கோயில் ஆகும். இது பஞ்ச கேதார தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது . இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தின் ருத்ரபிரயாக் மாவட்டத்தில் சிவாலிக் மலையில் 3680 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. துங்கநாத் என்பதற்கு கொடுமுடிகளின் நாதர் எனப் பொருள்கூறுகிறார்கள்.

அடிக்கணக்கில் அளவிடுவதென்றால் 12,800 அடி உயரத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சிவன் கோயிலாகக் கருதப்படும் இந்த துங்கநாத் கோயில் 5 முதல் 6 டிகிரி சாய்வதாக இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ASI) சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இப்படிச் சொன்னாலும், கோயில் வளாகத்தில் உள்ள சிறிய கட்டமைப்புகள் 6 அல்ல சுமார் 10 டிகிரி சாய்ந்துள்ளன.

இதைப்பற்றிய கேள்விகளுக்கு பதிலளிக்கையில் "முதலில், சேதத்தை உடனடியாக சரிசெய்ய முடிந்தால், அதன் மூல காரணத்தை நாங்கள் கண்டுபிடிப்போம். மேலும், கோயிலை முழுமையாக ஆய்வு செய்த பிறகு தான் விரிவான வேலைத் திட்டம் தயாரிக்கப்படும்” என்று ASI யின் டேராடூன் வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் மனோஜ் குமார் சக்சேனா கூறினார்.

இதுகுறித்து ட்தொல்பொருள் துறை அதிகாரிகள் கூறுகையில், கோயிலின் நிலை குறித்து மத்திய அரசுக்குத் தெரிவிக்கப்பட்டு, அதை பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும் எனும் கோரிக்கையும் எழுப்பப்பட்டுள்ளதாகக் கூறினர்.

"துங்கநாத் சிவன் கோயிலை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்கும் செயல்முறையை அரசாங்கம் தொடங்கியுள்ளது மற்றும் நடைமுறையில் பின்பற்றப்படும் வழக்கமாக இந்த அறிவிப்பு குறித்து பொதுமக்களிடமிருந்து ஏதேனும் ஆட்சேபனை இருக்கிறதா? என்பதைக் கோரும் அறிவிப்பையும் மத்திய அரசு வெளியிட்டுள்ளது" என்று ஒரு அதிகாரி கூறினார்.

ASI கோயிலின் சரிவுக்கான சாத்தியத்தை நிராகரிக்கவில்லை. தேவைப்பட்டால், நிபுணர்களுடன் கலந்தாலோசித்த பின்னர் சேதமடைந்த அஸ்திவாரக் கல்லை மாற்றுவோம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், “இது தொடர்பாக BKTC க்கும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அங்கிருந்து , நாங்கள் இன்னும் பதிலைப் பெறவில்லை. துங்கநாத் கோயில் பத்ரி கேதார்

கோயில் கமிட்டியின் (BKTC) நிர்வாகத்தின் கீழ் வருவதால் அவர்கள் அளிக்கும் பதிலும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

“இந்த விஷயம் சமீபத்தில் ஒரு வாரியக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது, அங்கு கோயிலின் அனைத்து பங்குதாரர்களும் ASI இன் முன்மொழிவை நிராகரித்தனர். கோவிலை அவர்களிடம் ஒப்படைக்காமல், அதன் அசல் வடிவத்திற்கு அவர்களின் உதவியைப் பெற நாங்கள் தயாராக இருக்கிறோம். எங்கள் முடிவைப் பற்றி விரைவில் அவர்களுக்குத் தெரிவிப்போம்,” என்று BKTC தலைவர் அஜேந்திர அஜய் ஊடகங்களிடம் தெரிவித்தார்.

இக்கோயில் மகாபாரத காவிய நாயகர்களான பஞ்ச பாண்டவர்களுடன் அதிகம் தொடர்புடையது என்றொரு ஐதீகம் உண்டு.

எது எப்படியோ உலகின் மிக உயரமான சிவன் கோயில் இயற்கை மற்றும் காலநிலை மாற்றத்தால் இடிந்து சிதிலமாகாமல் காப்பாற்றப்பட்டால் சரிதான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com