வறட்சியின் கோரப் பிடியில் துனிசியா

வறட்சியின் கோரப் பிடியில் துனிசியா

வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் துனிசியாவில் தண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடுகிறது. குடிநீர் விநியோகத்திற்கு ரேஷன் நடைமுறையை அமல்படுத்தியுள்ள அந்நாட்டு அரசு, தண்ணீர் பயன்பாட்டிற்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

ஆப்பிரிக்க கண்டத்தின் கடைக்கோடியில் அமைந்துள்ள துனிசியா நாட்டில், 40 சதவீத நிலப்பரப்பு பாலைவனப் பகுதியாக உள்ளது. மீதமுள்ள பகுதியில் பல்வேறு வளங்கள் நிறைந்து காணப்பட்ட துனிசியா, தற்போது நான்காவது ஆண்டாக வறட்சியின் கோரப்பிடியில் சிக்கித்தவித்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளை அச்சுறுத்தி வரும் காலநிலை மாற்றத்திற்கு, துனிசியாவும் தற்போது இலக்காகியுள்ளது.

காலநிலை மாற்றம் என்பது உலகில் நிலவும் தட்பவெட்ப நிலையில் ஏற்படும் மாற்றமாகும். உலகின் சராசரி வெப்பநிலை உயரும்போது அது பல்வேறு வகையான சூழ்நிலை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஒருவேளை பூமியானது தற்போது இருக்கும் வெப்பநிலையை விட 2 டிகிரி அதிகமானாலும், அனைத்து உயிரினங்களிலும் கிட்டத்தட்ட 18 சதவீதம் வரை அழியும் வாய்ப்புள்ளதாக அறிவியலாளர்கள் கூறுகிறார்கள். குறைந்தபட்சம் 100 கோடி மக்களாவது வரட்சியினால் நீர் பற்றாக்குறையை அனுபவிப்பார்கள். அதிக வெப்பத்தினால் பனிப்பாறைகள் உருக்குவதால், துருவ விலங்கினங்களான பென்குயின், சீல் மற்றும் துருவக் கரடிகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்களுக்கு உள்ளாக வாய்ப்புள்ளது.

பருவ மழை பொய்த்துப் போனதால் துனிசியாவில் உள்ள பெரும்பாலான ஏரிகள், குளங்கள், அணைகள் என அனைத்தும் வறண்டு காட்சியளிக்கிறது. மனிதன் உயிர் வாழ தண்ணீர் இன்றியமையாதது என்ற நிலையில், துனிசியா நாட்டு மக்கள் அத்தியாவசியத் தேவையான தண்ணீருக்காக அல்லாடி வருகின்றனர். அதிக விலை கொடுத்தும் தண்ணீர் கிடைக்காததால், கிணறுகளில் உள்ள தண்ணீரை வடிகட்டி குடிநீராகப் பயன்படுத்தும் நிலை பெரும்பாலான நகரங்களில் நிலவுகிறது.

கடும் வறட்சி காரணமாக குடிநீர் விநியோகத்திற்கு துனிசியா நாட்டு அரசு ரேஷன் நடைமுறையை அமல்படுத்தியுள்ளது. அதன்படி தலைநகரில் கூட இரவில் ஏழு மணி நேரம் தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது. கார்களைக் கழுவ, புல் தரைகளுக்கு குடிநீரைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. விதிகளை மீறினால் ஆறு மாதம் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் துனிசியா அரசு எச்சரித்துள்ளது.

ஏற்கனவே பல்தொழில் பொய்த்துப்போன துனிச்சியாவில், செப்டம்பர் மாத இறுதிவரை விவசாயத்திற்கு தண்ணீர் வினியோகம் நிறுத்தப்படுவதாக அந்நாட்டின் விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளதால், உணவுப் பஞ்சம் அதிகரிக்கும் அபாயம் உருவாகியுள்ளது.

குடிநீர் வினியோகத்திற்கு கட்டுப்பாடுகள் விதிப்பது மூலம் கோடை காலத்தை சமாளிக்க முடியும் என துனிசியா அரசாங்கம் நம்பினாலும்,இத்தகைய கோரப் பிடியில்ருந்து இந்நாட்டு தப்புமா ? மக்கள் கதி என்ன ஆகும் ? துனிசியா மயா னமகுமா ? மீண்டும் வருமா?

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com