துருக்கி நாட்டில் நேற்று அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கம் முதல் அடுத்தடுத்து மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதால் துருக்கியர்கள் பீதியில் உறைந்திருக்கிறார்கள். இதுவரையிலான பலி எண்ணிக்கை 2300 தாண்டியிருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
துருக்கி நாட்டின் தென் கிழக்கு பகுதியில் துர்நாகி என்ற நகரத்தில் இருந்து 23 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள காசினா டெட் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இன்று அதிகாலை 4.17 மணிக்கு சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை என்பதால் உயிரிழப்பு அதிகமாகவே இருந்தது.
ரிக்டர் அளவு கோலில் நிலநடுக்கம் 7.8 ஆக இது பதிவானது. அதையெடுத்து அடுத்த 15 நிமிடங்களில் காசினா டெட் அருகே இன்னொரு இடத்தில் அடுத்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 6.7 ஆக பதிவானது. துருக்கியில் அடுத்தடுத்து 2 தடவை அதிகாலை நேரத்தில் நடந்த நடுக்கத்தால் கட்டிடங்கள் தரைமட்டமாகின.
அதிகாலையிலேயே உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டிவிட்டது. பின்னர் 4 மணி நேரம் கழித்து, 6.0 என்ற ரிக்டர் அளவில் 3வது முறையாக நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம், பலி எண்ணிக்கை 2,300ஆக உயர்ந்துள்ளது.
இஸ்தான்புல்லை மையமாகக் கொண்டு ஒரு நிலநடுக்கம் வரக்கூடும் என்று நீண்டகாலமாக விஞ்ஞானிகள் எச்சரித்து வந்திருக்கிறார்கள். துருக்கி வரலாற்றில் மிக மோசமாக நிலநடுக்கம் 1999ஆம் ஆண்டு ஆகஸ்ட் 17ஆம் தேதி ஏற்பட்டது. டுஸ்ஸே நகரில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.4 புள்ளிகள் வரை பதிவானது.
துருக்கியில் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மிக மோசமான நிலநடுக்கம் என்று நிலவியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். ஐந்து நாட்களுக்கு முன்னரே ரிக்டர் அளவுகோலில் 7.5 அளவுக்கு நிலநடுக்கம் ஏற்படக்கூடும். மத்திய துருக்கி, ஜோர்டான், சிரியா, லெபனான் உள்ளிட்ட பகுதிகளை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் என்று ப்ராங் கூக்கர்பீட்ஸ் என்னும் நிலவியல் விஞ்ஞானி டிவிட்டரில் தெரிவித்திருந்தார்.
ஐந்துநாட்களுக்குமுன்னரேஇதுகுறித்துஎச்சரிக்கைசெய்தஆய்வாளரின்டிவிட்இணையத்தில்வைரலாகியிருக்கிறது