வியப்பில் அழ்த்தும் வித்தியாச மனிதர்கள்!

Are they human? Monkey? A surprisingly diverse human race.
Are they human? Monkey? A surprisingly diverse human race.
Published on

துருக்கி நாட்டில் உல்லாஸ் (Ulas family) என்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சாதாரண மனிதர்களைப் போல நடக்காமல் தங்களின் கை மற்றும் கால்களை பயன்படுத்தி நான்கு கால்களால் நடந்து வருகின்றனர். அவர்களின் இந்த நிகழ்வால் விஞ்ஞானிகள் குழம்பியுள்ளனர். 

இவர்கள் தொடர்பான ஆவணப்படம் கூட 2006 ஆம் ஆண்டு வெளியானது. அன்றிலிருந்து இன்று வரை இக்குடும்பத்தில் இருக்கும் அனைவருமே நான்கு காலால் தான் நடந்து வருகின்றனர். இதற்கான காரணம் என்னவென்று தெரியாமல் விஞ்ஞானிகள் திகைப்பில் உள்ளனர். இதுகுறித்து லண்டனைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கூறுகையில், 

"இந்த குடும்பத்தில் பிறந்த 4 சகோதரிகள் மற்றும் 1 சகோதரர் பிறக்கும்போதே மனிதர்களை விட வித்தியாசமாக பிறந்துள்ளனர். மனித இனம் குரங்குகளிலிருந்து பரிணாம வளர்ச்சியடைந்து வந்தது என்பதால், நம்முடைய முன்னோர்கள் நான்கு கால்களைப் பயன்படுத்தியே நடந்து வந்தனர். அதன் பின்னர் தான் கொஞ்சம் கொஞ்சமாக பரிணாம வளர்ச்சி அடைந்து இரண்டு கை மற்றும் இரண்டு கால்களை உடையவராக மனிதர்கள் மாறினார்கள். இதை எதிர்த்து கருத்து கூறுவோரும் உள்ளனர். 

நமது முன்னோர்கள் நான்கு கால்களில் தான் நடந்தார்கள் என்ற கருத்தை உறுதிப்படுத்தும் வகையிலேயே, துருக்கியைச் சேர்ந்த இந்த குடும்பத்தினர் இப்படி நான்கு கால்களில் நடக்கிறார்கள். இதில் அதிசயம் என்னவென்றால், இந்த குடும்பத்தில் பிறந்த ஆறாவது நபரும் இவர்களைப் போலவே நான்கு கால்களில் நடந்தார். ஆனால் அவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துவிட்டார். 

தற்போதைய நவீன உலகில் இப்படி ஒரு சம்பவம் இருக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. இதனால் மனிதனுடைய பரிணாம வளர்ச்சி பின்னோக்கி சென்றுவிட்டதா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. இதுகுறித்து மேலும் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டும். உலகின் மற்ற இடங்களில் இதுபோன்ற நபர்கள் இருக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். 

அதேசமயம் நான்கு கால்களால் நடக்கும் இவர்களுக்கு மருத்துவர்கள் பிசியோதெரபி அளித்ததில், அவர்களுக்கு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது" என அவர் கூறியுள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com