மரத்திற்கு Jackets போட்டுவிடும் துருக்கி மக்கள்… என்ன காரணம்?

Jackets
Jackets
Published on

துருக்கி மற்றும் பல்கேரிய மக்கள் மரத்திற்கு ஜாக்கெட் அணிந்துவிட்டு செல்வது குறித்து தெரியுமா? பொதுவாக இதுபோன்ற தகவல்கள் கேட்கும்போது. இது ஒரு மூடநம்பிக்கையாக இருக்கும் என்று சொல்லிவிட்டு செல்வோம். ஆனால், அதுதான் இல்லை. இது ஒரு சேவை. ஆம்! இது என்ன சேவை? ஏன் இப்படி செய்கிறார்கள்? என்பது குறித்துப் பார்ப்போம்.

ஒரு மரத்திற்கு பொட்டு வைத்து துணி கட்டிவிட்டால், அந்த மரத்தை நாம் கடவுளாக எண்ணி பூஜை செய்வோம். ஆனால், அதே மரத்தில் நிறைய பழங்கள் தொங்கினால், அவற்றைப் பறிப்பதில் சண்டைதான் உண்டாகும். நம்பிக்கைக்கு கொடுக்கும் மரியாதையை நாம் மனிதர்களுக்கு கொடுப்பதில்லை. வீடு இல்லாதவர்களுக்கு அந்த மரத்தின் பழம் ஒவ்வொன்றும் அமிர்தமாகும். ஆனால், நமக்கு அது வெரும் பழம்தான்.

சிறிதளவு அதீத நம்பிக்கைகளை ஓரம் வைத்துவிட்டு பிற மனிதர்களுக்காக யோசித்தால், மூட நம்பிக்கைகள் ஒழிந்து, போதுமான தேவையான நம்பிக்கை மட்டுமே இருக்கும்.

சரி, விஷயத்திற்கு வருவோம். துருக்கி மற்றும் பல்கேரியா மக்கள் போகும்போதும் வரும்போதும் தங்களுக்குப் பிடித்தால், தங்கள் ஜாக்கெட்டுகளை மரத்தில் அணியவிட்டு செல்லலாம். பிடித்தால்? என்ற சந்தேகத்திற்கு இடமே இல்லை. அவர்கள் ஒருமுறையாவது அந்த ஜாக்கெட்டை அணியவிடுகிறார்கள். ஏனெனில், காரணம் அப்படி.

குளிர்க்காலங்களில், ஸ்வெட்டர் போட்டப்பிறகும் கூட தாங்கமுடியாத குளிர் மக்களை வதைக்கும். ஸ்வெட்டர் அணிபவர்களுக்கே இந்த நிலைமை என்றால், சட்டை வாங்குவதற்கு கூட பணம் இல்லாமல், தெருக்களில் வாழும் மக்களின் நிலைமையை நினைத்துப் பாருங்களேன்.

அதாங்க விஷயம்! தெருக்களில் வீடு இல்லாமல் சுற்றித்திரியும் மக்களின் குளிரைப் போக்கவே, மரங்களில் அவர்கள் ஜாக்கெட்டுகளை அணிய விட்டுச் செல்கிறார்கள். தெருக்களில் அழையும் மக்கள், பாலைவனத்தில் காணல்நீரைக் கண்டதுபோல, பரவசத்துடன் அந்த ஜாக்கெட்டுகளை அணிந்துக்கொண்டு தங்களது குளிரைப் போக்கிக்கொள்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
கொல்கொத்தாவில் வன்முறை வெடித்தது!
Jackets

நல்ல விஷயங்களை எந்த நாடு செய்தால் என்ன? அதை நாம் பாராட்டுவோமே. ஓஹோ… நம்முடைய பாராட்டு அவர்களுக்கு எப்படி செல்லும்? சரி! அவர்களை போல நாமும் நல்ல விஷயங்களை செய்து, அவர்களின் செயல்களை வரவேற்போம்... குறைந்தபட்சம், நம் மக்களும் பயனடைவார்கள். அதேபோல், நம்முடைய செயல்கள் அவர்கள் பத்திரிக்கைகளிலும் வந்து நம்மை எண்ணி பொறாமைப்படலாம் அல்லவா?

எது எப்படியோ? நாமும் நல்லதை செய்வோமே….  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com