மகாகவி பிறந்த மண்ணில் மறையாத தீண்டாமை.. குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட கனிமொழி!

மகாகவி பிறந்த மண்ணில் மறையாத தீண்டாமை.. குழந்தைகளுடன் உணவு சாப்பிட்ட கனிமொழி!

ட்டியலின பெண் சமைத்த காலை உணவை சாப்பிட விடாமல் தடுத்த விவகாரத்தையடுத்து,  திமுக எம்.பி கனிமொழி நேரில் சென்று பள்ளியில் மாணவர்களுடன் அமர்ந்து  காலை உணவு சாப்பிட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த சமையலர் முனியசெல்வி காலை உணவு தயாரித்து வழங்கிவருகிறார். இதற்கு, அங்கு பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, காலை உணவு திட்டத்தில் தங்களது குழந்தைகளை சாப்பிடவிடாமல் தடுத்துள்ளனர்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் வருவாய் துறை, ஊராட்சி துறை, காவல்துறையினர் அந்த கிராமத்திற்கு சென்று பெற்றோருடன் பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால், தங்களது குழந்தைகளை காலை உணவு சாப்பிட அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதுதொடர்பான வீடியோக்கள் வெளியாகி சர்ச்சையான நிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.

சமையலர் முனியசெல்விடன் திமுக எம்பி கனிமொழி
சமையலர் முனியசெல்விடன் திமுக எம்பி கனிமொழி

அதைத் தொடர்ந்து, அந்த பள்ளிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், எம்.பியுமான கனிமொழி, அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தங்களது கிராமத்தில் சாதிய பாகுபாடே கிடையாது என்று கிராம மக்கள் தெரிவித்தனர். ஒருசிலர் தனிப்பட்ட முறையில் இதை பிரச்னையாகிவிட்டதாகவும், இனி இதுபோன்று நடக்காது என்றும் கிராம மக்கள் உறுதியளித்தனர்.

இதையடுத்து, சமையலர் முனிய செல்வி தயாரித்த காலை உணவை குழந்தைகளுடன் அமர்ந்து கனிமொழி எம்.பி. அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் சாப்பிட்டனர். தனிப்பட்ட நபர்களின் தவறான செயலால் ஒட்டுமொத்த கிராமும் கொச்சைப்படுத்தப்பட்டுள்ளதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்தனர். மேலும் இனி இதுபோன்ற செயல்கள் நடைபெறாது என்றும் அவர்கள் உறுதிபடத் தெரிவித்தனர். சாதி ஒழிய வேண்டும், பெண் சுதந்திரம் அடைய வேண்டும் என போராடிய மகாகவி பாரதியார் பிறந்த மண்ணில் இது போன்று தீண்டாமை சம்பவங்கள் தொடர்ந்து வருவது வேதனை அளிப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com