ஸ்மார்ட் போன்களில் இணைய வசதி இல்லாமல் டிவி பார்க்கும் திட்டம்:அரசு ஆலோசனை!

ஸ்மார்ட் போன்களில் இணைய வசதி இல்லாமல் டிவி பார்க்கும்  திட்டம்:அரசு ஆலோசனை!
Updated on

ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர்கள் இணைய வசதி இல்லாமல் டி2எம் என்ற திட்டத்தின் மூலம் டிவி சேனல்களை பார்ப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து ஒன்றிய அரசு தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை.

இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறை பல்வேறு புதுமைகளை நாளுக்கு நாள் புகுத்தப்பட்டு வருகின்றது. மேலும் மக்களுடைய வசதிக்கேற்ப பல திட்டங்கள் மறு ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது இருக்கக்கூடிய தொலைத்தொடர்பு சாதனங்களை மேலும் மேம்படுத்தும் வகைகள் ஒன்றிய அரசு தொலைத் தொடர்பு நிறுவனங்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

அந்த ஆலோசனையில் ஸ்மார்ட் போன் பயனாளர்கள் இனி இணையதள வசதி இல்லாமல் டிவி சேனல்களை பார்ப்பதற்கான வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து முதல் கட்ட ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

இந்தியாவில் 90 சதவீத மக்களிடம் செல்போன் பயன்பாடு உள்ளது. அதிலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தும் மக்களினுடைய எண்ணிக்கை 60 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் இணையதள வசதிகள் மூலமாக அனைத்து தேவைகளையும் அடைந்து கொள்ள வழி உள்ளது. ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தி இணைய வசதி இல்லாமல் செல்போன் வழியாக மக்களிடம் தொலைக்காட்சி சேனல்களை கொண்டு செல்வதற்கான டி2எம் என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

இதன் மூலம் பொழுதுபோக்கு தொலைக்காட்சிகள், செய்தி ஊடகங்கள், குழந்தைகளுக்கான சேனல்கள் மற்றும் கல்வி, விளையாட்டு, காமெடி, பாடல் என்ற சேனல்களை அறிமுகப்படுத்துவதற்கான முதல் கட்ட ஆலோசனை வெற்றிகரமாக முடிந்துள்ளது. இந்த திட்டம் அறிமுகப்படுத்தும் பட்சத்தில் மக்கள் அதிகம் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com