#JUST IN : திமுக வாக்குறுதிகள் என்ன ஆனது? அடுக்கடுக்கான கேள்விகளை கேட்ட தவெக தலைவர் விஜய்..!

TVK Vijay
TVK Vijay
Published on

தஞ்சாவூரில் தொண்டர்களின் கரகோஷங்கள் முழங்க கழுத்தில் பச்சை துண்டு அணிந்த விஜய் சரியாக 11:30 மணிக்கு மேடையில் ஏறி தனது உரையை நிகழ்த்தினார் அந்த உரையிலிருந்து சில துளிகள் இங்கு.

திமுக வாக்குறுதிகள் என்ன ஆனது?

கேஸ் சிலிண்டருக்கு ரூபாய் 100 கரும்புக்கு ஆதார விலை ரூபாய் 4000 போன்ற என்ற வாக்குறுதிகள் என்ன ஆனது?

1000 ரூபாய் கொடுத்து ஏமாற்ற நினைத்தார் ஸ்டாலின் தற்போது ரூபாய் 5000 கொடுத்து ஏமாற்ற முயற்சி செய்துள்ளார்.

எங்கள் ஆட்சியில் உரத்தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக் கொள்வோம்.

5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வேளாண் பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி ..

5 ஏக்கருக்கு அதிகமாக வைத்துள்ள விவசாயிகளின் பயிர் கடனை 50 சதவீதம் தள்ளுபடி குறித்து ஆலோசனை செய்யப்படும்..

இரண்டு ஏக்கருக்கு குறைவானவர்களின் பிள்ளைகளின் கல்வி செலவை அரசு முழுமையாக ஏற்கும்..

கல்வி ,மருத்துவம் ,ரேஷன் ,பஸ் வசதி போன்ற அடிப்படை விஷயங்களுக்கு மட்டுமே அரசு முக்கியத்துவம் தரும் .

நமது குழந்தைகள் நமது இளைஞர்களின் வாழ்க்கைக்கு முன்னுரிமை தரப்படும். அரசு வேலை வாய்ப்பு மட்டுமின்றி தனியார் வேலை வாய்ப்புகளுக்கும் வாய்ப்பு தரப்படும் .

நெல் கொள்முதல் நிலையங்களில் தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் கமிஷன் இருக்காது.

500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைக்கப்படும். பெண்களுக்கு பெண் எடையாளர். ஆண்களுக்கு ஆண் எடையாளர் பணியாற்றுவர்.

நியாயவிலைக் கடைகள் பொருட்கள் அனைத்தும் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும்.

ஊழலே செய்யாதவர்கள் நாங்கள் என்றும் ஊழல் செய்ய மாட்டோம் என்றும் யாராலும் சொல்ல முடியாது

"ஊழலற்ற ஆட்சி அமைய இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே உண்மையாக தருவீர்களா இந்த விஜய தம்புகிறீர்களா?" எனக் கூடியிருந்த தொண்டர்களிடம் உறுதிமொழி வாங்கினார் விஜய்.

மேலும் "மக்களை நேசிக்கும் விஜய் வேண்டுமா? மக்களுக்கு எதிராக ஆட்சி நடத்தும் ஸ்டாலின் சார் வேண்டுமா விஜய் வேண்டுமா ஸ்டாலின் சார் வேண்டுமா? எங்கள் ஓட்டு எங்கள் உரிமை இதை யாரும் விலைக்கு வாங்க முடியாது எங்க ஓட்டு விசில் சின்னத்துக்கு தான் யாரையும் நம்பி ஏமாற மாட்டோம் எங்கள் வார்த்தையில் இருந்து மாற மாட்டோம் இது நிஜம் என் நெஞ்சில் குடியிருக்கும் தஞ்சை மக்களே" என்று உறுதிமொழி வாங்கி தனது உரையை முடித்துக் கொண்டார் விஜய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com