

புதுச்சேரியில் இன்று நடைபெறவுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பிரச்சாரக் கூட்டத்திற்கு தவெக சார்பில் அனுமதி கோரிய போது காவல்துறை பல நிபந்தனைகளுடன் அனுமதி அளித்திருந்த நிலையில் தற்போது விஜய் சென்னையில் இருந்து புதுச்சேரி நோக்கி சென்று கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் போட்டியிடும் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திற்கு சென்று கொண்டிருந்த விஜய் கார் அவ்வப்போது முக்கியமான ஜங்ஷன் பகுதிகளில் வேகத்தைக் குறைத்து விஜயைக் காண வரும் ரசிகர்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் செல்லும் .
இந்நிலையில் புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருக்கும் விஜயின் ரேன்ஜ் ரோவர் கார் விழுப்புரம் மரக்காணம் சாலையில் வேகத்தைக் குறைத்து போது எதிர்பாராத வகையில் அங்கு இருந்த ரசிகர்கள் காரை சூழ்ந்ததுமில்லாமல் ஊற்சாக மிகுதியில் விஜயின் ரேன்ஜ் ரோவர் கார் மீது ஏறி அமர்ந்து கொண்டு புகைப்படமும் எடுத்தனர். கார் மீது ஏறி விஜயை நோக்கி பிளையிங் முத்தங்களையும் பறக்க விட்டனர். அத்துடன் எல்லையை மீறி கார் பானட் மீதும் சிலர் ஏறியதால் பவுன்சர்கள் பாய்ந்து வந்தனர்.
மேலும் விஜயை நோக்கி கார் முன்புறம் பாய்ந்த தொண்டரை தூக்கி அப்புறப்படுத்தி கார் செல்ல வழி ஏற்படுத்தினர். பவுன்சர் ரசிகர் தூக்கிய காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாத வகையில் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை காற்றில் பறக்க விடும் இது போன்ற அதீத உற்சாகம் கொண்ட ரசிகர்களால் விஜய் அதிர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் விஜய் கலந்து கொள்ளும் பிரச்சாரக் கூட்டங்களில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளதால் விஜய் கூட்டம் நடந்து முடியும் வரை அப்பகுதி மக்கள் ஒருவித அச்சத்துடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது