

அடுத்து தமிழ்நாட்டின் ஆட்சி சிம்மாசனத்தில் அமரப்போகும் ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாள் நெருங்கி வரும் வேளையில் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு விட்ட நிலையில் தற்போது புதிய கட்சியாக மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை பெற்று வரும் தவெக இன்று தனது தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே தவெக தலைவர் விஜய் வெவ்வேறு ஊர்களில் நிகழ்ந்த பரப்புரையின் போது தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கியமான வாக்குறுதிகளை பட்டியலிட்டு விட்ட நிலையில் முழு வாக்குறுதிகள் கொண்ட அறிக்கை வெளியாவது குறிப்பிடத்தக்கது.
சென்னை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில், இன்று மாலை நடைபெற்ற கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில், தமிழக வெற்றிக் கழகத்தின் தொலைநோக்குப் பார்வை கொண்ட, தமிழ்நாட்டு மக்களுக்கான கழகத் தேர்தல் அறிக்கையைக் கழகத் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் கழக நிர்வாகிகள் 800 பேர் மட்டுமே கலந்துகொள்ள, தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெறப்பட்டு CR code அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள கழக நிர்வாகிகள் மட்டுமே பங்கு பெற்றனர்
மேலும் தேர்தல் தேர்தல் அறிக்கை மலரை விஜய் விவசாயி நாராயணன் மூலம் வெளியிடப்பட்டது சிறப்பு. மேலும் ஆசிரியை, ஆட்டோ ஓட்டுநர் , துப்புரவு பணியாளர் ,நெசவாளர் ,மீனவர் ,மூன்றாம் பாலினத்தவர் என அனைத்து துறையினரையும் ஜாதி மத பாகுபாடின்றி மேடையேற்றி புதுமையான முறையில் மலரை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
"மக்களின் தேர்தல் அறிக்கை" எனும் பெயரில் வெளியான தவெகவின் தேர்தல் வாக்குறுதிகள் இதோ..
திருக்குறளும் நமக்கு ஒரு வழிகாட்டினே சொல்லலாம் அதனாலதான் திருக்குறள் சொன்ன அறம் பொருள் இன்பத்த அடிப்படைய வச்சு நம்ம தேர்தல் அறிக்கையோட வாக்குறுதிகள் இருக்கும்
பெண்கள் அதிகாரம் மிக்கவர் என்பதை பறைசாற்றும் வெற்றி மகளிர் திட்டங்கள் என்ற முதல் அம்சத்தில் 60 வயதிற்குள் உள்ள ஒவ்வொரு குடும்பத் தலைவியின் வங்கி கணக்கிலும் நேரடியாக மாதம் 2500 ரூபாய் என்று துவங்கி ஒவ்வொரு சமூகத் தலைப்புகளில் உருவான 10 அம்சங்களிலும் வாக்குறுதிகளை தந்தார் விஜய்.
அவற்றில் சில இங்கு.
தமிழகம் பள்ளி கல்லூரிகளில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு மன்றங்கள் அமைக்கப்படும்.
ஒவ்வொரு தமிழ் மாணவரின் கல்வி கனவுகளுக்கும் ஆதரவு அளிக்கும் வகையில் இளங்கலை முதல் முனைவர் பட்டம் வரை 20 லட்சம் பிணையில்லா கல்வி கடன்.
ஆறாம் வகுப்பிலிருந்து 12-ம் வகுப்பு வரை தரமான கல்வியை வழங்கும் இலவச உரைவிட பள்ளிகள் ஒவ்வொரு பள்ளியிலும் நவீன உள்கட்டமைப்பு மற்றும் உலக தரம் வாய்ந்த கல்வி
ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு அல்லது அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு குழந்தையின் தாய் அல்லது பாதுகாவலருக்கு இடைநிற்றலை தவிர்ப்பதற்காக ஆண்டுக்கு ரூபாய் 15,000..
எதிர்கால திறன் பயிற்சி மையங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் இலவச போட்டி தேர்வு பயிற்சி அளிக்கப்படும்.
மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை தரமான கல்வி வழங்கப்படும்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 25 லட்சம் வரையிலான சுகாதார காப்பீட்டு திட்டம். மலிவு விலை மருந்துகளும் வழங்கப்படும்.
60 வயதுக்கு உட்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.2500"
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும்
பெண்களுக்கு மாதம் ரூபாய் 2500 உரிமைத்தொகை , ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் இலவசம்
29 வயதுக்கு மேல் வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூபாய் 4000 உதவித் தொகை .
பிணையம் ஏதும் இன்றி ரூபாய் 20 லட்சம் வரை மாணவர்களுக்கு கல்வி கடன்.
இரண்டு ஏக்கர் வரை நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பிள்ளைகளின் முழுக் கல்விச் செலவையும் அரசே ஏற்கும்.
ஐந்து ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு பயிர் கடன் முழுமையாக தள்ளுபடி.
ஐந்து ஏக்கருக்கு அதிகமாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு 50 சதவீதம் பயிர் கடன் தள்ளுபடி.
கரும்பு டன்னுக்கு ரூபாய் 4500 குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்.
5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும் .
ஐந்து லட்சம் இலவச சோலார் பம்பு செட்டுகள்.
முதியோருக்கு மாதம் 3, 000 ரூபாய் ஓய்வூதியம் வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட மீனவர்களுக்கு ரூபாய் 25 லட்சம் விபத்து காப்பீடு .
ஒவ்வொரு வீடுகளுக்கும் 100% குழாய் வழி குடிநீர் வசதி.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் 200 யூனிட்டுகள் கட்டணமில்லா மின்சாரம்.
ஒப்பந்த ஆசிரியர்கள் தாமாக பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் .
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பிரத்தியேக மாஸ்டர் பிளான் தயாரிக்கப்படும்.
தமிழ்நாட்டை இந்தியாவின் ஏஐ நகரமாக மாற்றிக் காட்டுவோம்.
அரசு திட்டங்கள் ரேஷன் உள்ளிட்டவை வீட்டுக்கே வந்து சேரும்.
பொது மக்களின் பிரச்சினைகளை விவாதிக்க சட்டமன்றத்தில் சிறப்பு நாள்.
21 நாட்களுக்குள் வணிக உரிம உத்தரவாதம்
இப்படி பல்வேறு நலத்திட்ட வாக்குறுதிகளை அளித்த விஜய் மக்கள் அனைவரும் என்னை நம்பலாம் . நான் பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்ற மாட்டேன் என்று உறுதியளித்து வணங்கினார்.