திமுக பாணியில் ஆளுநரை விமர்சித்த தவெக அமைச்சர் : வைகை நதி விவகாரத்தில் வெடித்த புதிய மோதல்!

வைகை நதியை தூர்வாரும் விவகாரத்தில் ஆளுநரை திமுக பாணியில் தவெக அமைச்சர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளது தமிழக அரசியலில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
TVK minister against Governor
minister Nirmal kumar
Updated on

அமைச்சர் நிர்மல் குமார் இன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது,

வைகை நதியை உடனடியாக தூர்வாரவிட்டால் ஆளுநர் மாளிகையை களத்தில் இறங்கி செயல்படும் என்ற அறிவிப்பிற்கு பதிலளித்திருந்தார். இது பற்றிய விளக்கம் அளித்த அமைச்சர் நிர்மல் குமார் ஆளுநரை மிக கடுமையாக விமர்சித்து பேசி இருந்தார். இதற்கு, முன்னர் திமுக ஆட்சியில் ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்து பேசுவதை , அந்த கட்சி அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கமாக வைத்திருந்தனர். அதே பாணியை தற்போது தவெக அமைச்சரும் பின்பற்றுகிறாரோ என்ற ஐயம் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் நிர்மல்குமார் பேசுகையில், "ஆளுநர் மாளிகைக்குள் அவரால் என்ன வேலையை செய்ய முடியுமோ? அந்த வேலையை தான் அவர் செய்ய வேண்டும். தேவையில்லாத குழப்பங்களை எல்லாம் அவர் ஏற்படுத்த தேவையில்லை. தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைத்த பின் முதல்வரின் பரிந்துரையின் பெயரில் வைகை நதி சீரமைக்கும் பணி தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக ஒன்றிய அரசிடம் இருந்து அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

இரண்டு வாரங்களாகியும் அங்கிருந்து இன்னும் அனுமதி எதுவும் கிடைக்கவில்லை. இந்த கால தாமதத்தினால் இன்னும் பணிகள் எதுவும் தொடங்கவில்லை , விரைவில் அது கிடைத்ததும் விஜய் தலைமையிலான அரசு தூர்வாரும் பணிகளை செய்ய உள்ளது. தேவையான விஷயங்களுக்கு துரிதமான முறையில் வேகமாக இந்த அரசாங்கம் செயல்பட்டு கொண்டிருக்கிறது.

ஆளுநர் வைகை நதியை தூர்வார வேண்டும் என்றால் அவரே நேரடியாக சென்று, மண்வெட்டியை வைத்து தூர்வாறுவரா? அல்லது பொதுப்பணி துறையிடம் அனுமதி பெற்று அவர் தூர் வாறுவரா? சுற்றுச்சூழல் அனுமதியை அவர் பெறுவாரா? ஆளுநரால் என்ன வேலை செய்ய முடியும். ஆளுநர் என்ன வேலையை செய்ய வேண்டுமோ? அந்த வேலையை மட்டும் செய்தால் போதுமானது.

ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது, அந்த அதிகாரத்திற்கு உட்பட்ட வேலைகளை மட்டும் அவர் செய்யதால் போதுமானது. வைகை நதியை தூர்வார வேண்டும் என்றால் அவர் எப்படி செல்வார்? அவர் யாருக்காவது காண்ட்ராக்ட் வாங்கி கொடுப்பாரா? அதன் மூலம் இந்த பணிகளை மேற்கொள்வாரா! 10 லாரியை வைத்துக்கொண்டு இந்த வேலையை செய்வாரா? ஆளுநர் இதுபோன்ற விஷயங்களை தலையிட தேவையில்லை.

Tvk leaders with Governor
Nirmal kumar and governorindia today

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் நடைமுறையில் இருக்கும் பொழுது , இது போன்ற வேலைகளை செய்யத்தான் மக்கள் பிரதிநிதிகள் இருக்கிறார்கள். ஆளுநர் எந்த ஒரு ஆய்வுக்கும் செல்ல தேவை இல்லை, ஆளுநருடன் எந்த ஒரு அரசு அதிகாரியும், முதல்வரின் ஆணையின்றி ஆய்வுக்கு செல்லக்கூடாது, என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

வழக்கமாக தமிழக வெற்றி கழக கட்சியை சேர்ந்தவர்கள் ஒன்றிய அரசு என்று குறிப்பிடாமல் ,மத்திய அரசு என்று குறிப்பிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர். தற்போது திமுகவை பின்பற்றி அவர்களும் ஒன்றிய அரசு என்று கூற ஆரம்பித்துள்ளனர். இதுவரை மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக இருந்த சூழலில், தற்போது ஆளுநர் மீதான விமர்சனங்கள் அமைச்சரால் முன்வைக்கப்படுகின்றன. இனி ஆளுநருடன் புதிய அரசின் உறவு எப்படி இருக்கும் என்று போக போக தெரியும்.

ஆளுநரின் இந்த செயலுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்திருந்தன. குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், "ஆளுநர் ஆய்வு செய்தார் என்ற கூவத்தூர் ஆட்சி கால வரலாறு, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் திரும்புகிறது. மதுரை சென்றிருந்த ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், தான் நியமன பதவியில் - அதுவும் கூடுதல் பொறுப்பில் தமிழ்நாடு ஆளுநராக இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தி இருக்கிறார். அரசியலமைப்புக்கும் - மாநில உரிமைக்கும் எதிரான இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த Sofa Model அரசிற்கும் கடும் கண்டனங்கள்"

ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும் போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களம் இறங்கும் என்று அடாவடியாக பேசி இருக்கிறார். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காராணம்.

ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு, என்ன Compromise செய்யப்பட்டது என்று சட்டமன்றத்தில் கேட்டிருந்தோம்.

அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை compromise செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை Panic buying செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற anxiety-யில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா?

முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். கழகத்தலைவர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.

ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என தனது x பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com