பிரதமரை தீர்மானிக்க போவது தமிழ்நாடு தான்! – 2029 தேர்தல் குறித்து தவெக எம்.எல்.ஏ கனிமொழி கணிப்பு..!

2029-ல் விஜய் தான் பிரதமர்!: 'டெல்லி முடிவு செய்யாது; ராகுலே அமர வைப்பார்' - தவெக எம்.எல்.ஏ கனிமொழி அதிரடி!
தவெக எம்.எல்.ஏ கனிமொழி
தவெக எம்.எல்.ஏ கனிமொழிsource:toptamilnews
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on

2029ல் விஜய் தான் பிரதமர். 2029 இல் பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப்போவதில்லை; தமிழ்நாட்டில் இருந்து தான் முடிவு செய்யப் போகிறார்கள். இந்திய அளவில் 2029 நாடாளுமன்றத் தேர்தல் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தும். 2029-ல் ஒரு மாற்றத்தை நீங்கள் அனைவரும் பார்ப்பீர்கள். ராகுல் காந்தியே விஜயை பிரதமர் நாற்காலில் அமர வைப்பார் என கவுண்டம்பாளையம் தவெக எம்.எல்.ஏ கனிமொழி கூறியது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்வளம், மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை ஆகிய துறைகளின் மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு அதன் மீதான விவாதம் நடைபெற்றது. தமிழக சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக வருகை தந்த தவெக எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது, 2029 ஆம் ஆண்டில் பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது தான் முக்கியமான விஷயம் என்றும், ஆனால் இந்த முறை பிரதமரை டெல்லியில் இருந்து முடிவு செய்யப் போவதில்லை தமிழ்நாட்டில் இருந்து தான் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யப் போகிறார்கள் என்று கூறினார்.

2029 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு மிகப்பெரிய மாற்றத்தை எதிர்நோக்கும் என்றவர், நமது தலைவர் விஜயை முதலமைச்சர் பதவியில் அமர வைத்ததே காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தான்; அவரே நம்முடைய தலைவரின் கையைப் பிடித்து 2029 இல் பிரதமர் பதவியில் அமர வைப்பார்.

நான் 2025-ல் கணித்ததை போல 2026-ல் விஜய் முதலமைச்சரானார். 2026இல் சொல்கிறேன் 2029இல் தமிழகத்திலிருந்துதான் பிரதமர் உருவாகப் போகிறார்” என்றார்.2029 இல் இது கண்டிப்பாக நடக்கும் என்று தவெக எம்எல்ஏ கனிமொழி கூறியுள்ளார். 2026 இல் விஜய் எப்படி முதல்வர் ஆனாரோ அதேபோல் 2029 இல் விஜய் பிரதமர் ஆவார் என்று கூறினார்.

தவெக எம்.எல்.ஏ கனிமொழி
தவெக எம்.எல்.ஏ கனிமொழி

இதைத் தொடர்ந்து, இதற்கு பதிலளித்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட், தற்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ரசிகர் மனநிலையில் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் தலைவரைத்தான் சொல்வார்கள். ராகுல் காந்தி தான் அடுத்த பிரதமர். எங்கள் காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமல்ல, இந்தியாவே இதுகுறித்து தெளிவாக இருக்கிறது” என்று தெரிவித்தார்.

அண்மையில் இந்தியா டுடே நிகழ்த்திய Mood of the Nation கருத்துக் கணிப்பில் பிரதமர் வேட்பாளருக்கான போட்டியில் விஜய் மூன்றாவது இடத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் பதவி விலகுவோம் என்று காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்து இருந்தார். தங்களுக்கு பதவியை விட கட்சியே முக்கியம் என்று கூறியிருந்தார். இது சர்ச்சையான நிலையில் மற்றொரு புறம் மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எல்லா கருத்துக்கணிப்பும் உண்மையல்ல என்று பதிவு செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில நாட்களாகவே முதல்வர் விஜய் இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் என்றும், அவர்தான் 2029 இல் பிரதமர் ஆவார் என்றும் தவெக எம்எல்ஏக்கள் முதல் அமைச்சர்கள் வரை கூறிக் கொண்டு வருகின்றனர்.

இது தவெக கூட்டணியில் இருக்கும் தமிழக காங்கிரசுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்:
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம்: தவெக-விற்கு செக் வைத்த காங்கிரஸ்.!
தவெக எம்.எல்.ஏ கனிமொழி
logo
Kalki Online
kalkionline.com