#JUST IN : புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்றுத் தருவோம்.. தவெக விஜய் அதிரடி உறுதி..!

VIJAY
VIJAY
Published on

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் 12 தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து தவிக்க தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார். காலாப்பட்டு ,உழவர் காரை , லாஸ்பேட்டை, ஊசுடு ,கதிர்காமம், இந்திரா நகர் உள்ளிட்ட  12 தொகுதிகளின் வேட்பாளர்களும் வந்திருந்த நிலையில் வாக்காளர்களுக்கு ஆதரவாக விஜய் இன்று வாக்கு சேகரித்தார்.

திமுகவும் காங்கிரசும் புதுச்சேரியில் குழப்பமான கூட்டணி அமைத்து இருக்கிறது. தமிழகத்திலும் திமுகவும் காங்கிரசும் குழப்பமான கூட்டணி தான் என்ற விஜய் புதுச்சேரியில் ரேஷன் கடைகள் முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் ஆதாரத்துடன் விஜய் முன் வைத்தார்  புதுச்சேரிக்கு ஏன் மாநில அந்தஸ்து தரவில்லை?  என்றும் கேள்வி எழுப்பினார்.

மேலும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ரூபாய் 25000 மகப்பேறு உதவித் தொகையாக வழங்கப்படும். அனைத்து அரசு வேலைகளில் உள்ள காலிப் பணியிடங்களும் நிரப்பப்படும். 100% பயிர் காப்பீடு வழங்கப்படும். மீன்பிடிக்க செல்போனுக்கு லிட்டருக்கு ரூபாய் 20 டீசல் மானியம் வழங்கப்படும் ,ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 25 லட்சம் மருத்துவ காப்பீடு வழங்கப்படும். என்றும் மேலும் புதுச்சேரியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூபாய் 25 லட்சத்தில் மருத்துவ காப்பீடு பெற்று தரப்படும் ,புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து பெற்று தர முயற்சி செய்யப்படும் , தவெக ஆட்சி அமைந்தால் உடனடியாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் போன்ற உறுதிமொழிகளை பட்டியலிட்டார்.

"மிரளப்போகுது ஸ்டேட்டு நம்ம விசிலு சத்தம் கேட்டு.. " என்று பாடல் பாடி தொண்டர்கள் கரகோஷத்துடன் விடைபெற்றார் விஜய்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com