#BREAKING : மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள்: அமைச்சர் வினோத்..!!

மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.
அமைச்சர் வினோத்
அமைச்சர் வினோத்image credit-maalaimalar.com
Updated on

நேற்று முதல் முறையாக முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தது. நிதி அமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நேற்றைய பொது பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டது. தமிழகத்தை பொறுத்தவரை வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

அதன்படி இன்று காலை 9.30 மணி அளவில் தமிழக சட்டசபையில் வேளாண் துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்ய தொடங்கினார். தொடர்ந்து அவர் வேளாண் துறைக்கான புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

‘வெற்றி வான் மகள் திட்டம்’- பெண்களை ட்ரோன்களை இயக்குபவர்களாக மாற்றுவதற்கு பட்ஜெட்டில் திட்டம்.

50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50% மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும் என அமைச்சர் வினோத் அறிவித்துள்ளார்.

தகுதியுள்ள 100 மகளிர் உள்ளிட்ட 500 பேருக்கு ட்ரோன் இயக்க பயிற்சி வழங்க ரூ.1.50 கோடியில் வான்மகள் திட்டம் தொடங்கப்படும்.

பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ரூ.2.50 கோடியில் ட்ரோன்கள் வழங்கப்படும்.

ரூ.4 கோடியில் ட்ரோன் இயக்க பயிற்சி பெற்ற 50 மகளிருக்கு 50 சதவீதம் மானியத்தில் ட்ரோன்கள் வழங்கப்படும்.

கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு 30% ஒதுக்கீடு

ரூ.10 கோடியில் வெற்றி இல்லத்தரசி வீட்டு தோட்டம் திட்டம்- அமைச்சர் வினோத்

மாடித்தோட்டம் அமைக்க இடுபொருட்கள், விதைகள், நிழல்வலை குடில்கள் வழங்கப்படும்.

மாநில அளவில் பயிர் விளைச்சல் போட்டி நடத்தப்பட்டு மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் விருது வழங்கப்படும் என அறிவிப்பு

ஒவ்வொரு ஆண்டும் 5 விவசாயிகளுக்கு சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருது வழங்கப்படும். இதற்காக ரூ.11 லட்சம் ஒதுக்கீடு.

அண்ணல் அம்பேத்கர் வேளாண் உதவி திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த சிறு, குறு விவசாயிகள், உயர்மதிப்பு வேளாண் திட்டங்களில் 20 சதவீதம் வரை கூடுதல் மானியம் வழங்கப்படும்.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு மின்மோட்டார் சூரிய சக்தி பம்புசெட்டுகள் 300 ஆழ்துளை அல்லது குழாய் கிணறுகளுக்கு 100 சதவீதம் மானியம் வழங்கப்படும். இந்த திட்டத்திற்காக ரூ.56.72 கோடி நிதி ஒதுக்கீடு.

57,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட வெங்காய கிடங்குகள் ரூ.22.80 கோடியில் அமைக்கப்படும். வெங்காய தட்டுப்பாட்டை தடுத்து விலையை நிலையாக வைக்கும் பொருட்டு வெங்காய கிடங்குகள் அமைக்கப்படும்.

ரூ.5.30 கோடியில் தமிழ்நாடு தென்னை பதப்படுத்தும் கழகம் அமைக்கப்படும். தென்னை வாடல் நோய் தடுப்பு திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்படும். தென்னை டானிக் வழங்க ரூ.6.20 கோடி ஒதுக்கீடு.

திருவள்ளூர் மாவட்டம் புட்லூரில் 51 ஏக்கரில் நாற்று பண்னை ரூ.7 கோடியில் அமைக்க திட்டம்.

வேளாண் தொழிலில் இயந்திரமயமாக்கலை ஊக்குவிக்க மானிய விலையில் கருவிகள் வழங்க திட்டம். 24,000 விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.227.20 கோடியில் மானிய விலையில் கருவிகள் வழங்கப்படும்.

logo
Kalki Online
kalkionline.com