#JUST IN : தேர்தல் மற்றவர்களுக்கு தான் எலக்சன் தவெகவுக்கு எமோஷன் - விஜய் பரப்புரையில் ஆவேசம்..!!

TVK Vijay
TVK Vijay
Published on

பாளையங்கோட்டையில் உள்ள கேடிசி நகரில் ஐந்து தொகுதிகளின் தவெக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தற்போது விஜய் செய்த பரப்புரையில்  "காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருக்கிறார்? பெண்கள் குழந்தைகளுக்கு இங்கு பாதுகாப்பு இல்லை" என்பது போன்ற பல்வேறு விமர்சனங்கள் திமுக அரசு மீது வைக்கப்பட்டது.

வெளியில் தனித்தனியாக இருந்தாலும் திமுக அதிமுக இரண்டும் திமுக பாஜக கூட்டணிகள் ஒன்றுதான் .

திமுக அரசிடம் முழு பவர் இருந்திருந்தால் இந்த கூட்டத்திற்கு அனுமதி கிடைத்திருக்காது அதிகாரம் இல்லாத முதல்வராக தான் மு க ஸ்டாலின் இருக்கிறார்.

நம்மைப் பற்றி அவதூறு பரப்புகிறார்கள்   திமுக கூட்டணி கலகலத்துப் போய்விட்டது. திமுகவின் நேரடி கூட்டணிக்கும் கூட்டணிக்கும் மறைமுக கூட்டணிக்கும் நம் மீது கோபம்..

தமிழ்நாடு காங்கிரசை கோடிகளை கொடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டது .. காசு வாங்கும் தமிழக காங்கிரஸ்தான் திமுகவின் பக்கம் உள்ளது. ஆனால் உண்மையான காங்கிரஸ் எங்கள் பக்கமே இருக்கிறது..

ஒவ்வொரு வீட்டுக்கும் நான் சென்ற பிறகே கட்சியை ஆரம்பித்து உள்ளேன். விஜய்க்கும் விஜய்யுடன் இருப்பவர்களுக்கும் இந்த தேர்தல் எமோஷன் (EMOTION) . யாராலும் மக்களிடம் இருந்து என்னை பிரிக்க முடியாது.

கரூர் விவகாரத்தில் என் மீது பழி போட்டனர். ஜனநாயகன் படத்தையும் வெளியிடப்படாமல் முடக்கினர். ஆனால் எதுவும் செய்ய முடியவில்லை.எனது பரப்புரைக்கு மட்டுமே கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர் .

வரும் தேர்தல் மற்றவர்களுக்கு தான் எலக்சன் ( Election) தவெகவுக்கு எமோஷன் ( Emotion) .  234 தொகுதிகளிலும் இந்த விஜய் தான் வேட்பாளர் . இத்தனை வருடங்கள் யார் யாருக்கோ நீங்கள் ஓட்டு போட்டீர்கள் ஆனால் இந்த வருடம் உங்கள் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு நீங்கள் ஓட்டு போடுகிறீர்கள் .

இந்த ஓட்டு நமக்கு நாமே போட்டுக் கொள்வது போல் ஏனெனில் அந்த வேட்பாளர் ஜெயித்தால் நாம் ஜெயித்தது போல் . ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் வழக்கமான தேர்தல் இல்லை இது.

இப்படிப்பட்ட எமோஷனலான ஒரு எலக்சனை தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவை பார்த்தது கிடையாது .இது ஒரு அதிசய எலக்சன் ஆகவே இந்த வாய்ப்பை மிஸ் பண்ண வேண்டாம்.

பெண்கள், இளைஞர்கள்,விவசாயிகள் , மீனவர்கள் ,உழைக்கும் மக்கள் , நம்முடைய சந்ததிகள் அனைவரும் இன்னும் பல வருடங்கள் . நன்றாக இருப்போம். அதனால் மீண்டும் மீண்டும் கேட்கிறேன் அண்ணனுக்கு ஓட்டு போடுங்கள்.

மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசா கூட தொட வேண்டிய அவசியமே எனக்கு இல்லை இந்த வார்த்தைகளை என்னை எதிர்ப்பவர்கள் சொல்ல முடியுமா?

ஆட்சி முழுவதும் ஊழல் மலிந்து காணப்படுகிறது ..ஆனால் நாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக சாத்தியமாக்குவோம்  என்று கூறிய விஜய் வழக்கம் போல  'நல்லவங்க வாழ நீ விசிலுக்கு அடி. 'எனும் பாடலுடன் உரையை முடித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com