புதிய வாசிப்பு வரம்பைக் கொண்டு வந்த ட்விட்டர். ஏன் தெரியுமா?

புதிய வாசிப்பு வரம்பைக் கொண்டு வந்த ட்விட்டர். ஏன் தெரியுமா?

ட்விட்டர் தளத்தில் புதிய வாசிப்பு வரம்பு கொண்டு வரப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் சமீபத்தில் வெளியிட்ட செய்தியால், ட்விட்டர் தளத்தைப் போன்றே இயங்கும் மற்ற தளங்களின் யூசர் ஆக்டிவிட்டி அதிகரித்துள்ளது. 

நேற்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக ட்விட்டர் தளம் செயலிழந்ததால், அனைத்து சரிபார்க்கப்பட்ட மற்றும் சரிபார்க்கப்படாத பயனர்களுக்கும், புதிய தினசரி வாசிப்பு வரம்பை எலான் மஸ்க் அறிவித்தார். ட்விட்டர் தளத்தில் அதிகப்படியாக டேட்டா ஸ்க்ரேப்பிங் ஏற்படுவதால், எதிர்காலத்தில் அதன் செயலிழப்பைத் தடுக்க, பயனர்கள் நாள்தோறும் குறிப்பிட்ட அளவிலான ட்வீட்டுகளை மட்டுமே அணுகும்படியான புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 

இதனால், பல பயனர்கள் தங்களின் ஒரு ட்விட்டர் கணக்கில் தினசரி வரம்பு முடிந்ததும், மற்றொரு கணக்கு வழியாக உள்ளே நுழைந்து, புதிய நேர வரம்பு குறித்து எதிர்க்கருத்து தெரிவிக்கின்றனர். இதனால் #TwitterLimits என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது. மேலும் இந்த புதிய விதிமுறையால் twitter தளம் போலவே இயங்கும் மற்ற தளங்களின் பயனர் செயல்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக ப்ளூ ஸ்கை என்ற தளத்தில் அதிகப்படியாக தற்போது பயனர்கள் இணைந்து வருகின்றனர். எனவே, அதிகப்படியான போக்குவரத்து காரணமாக, தற்காலிகமாக அந்த தளத்தின் உள்ளே நுழையும் ஆப்ஷன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மெட்டா நிறுவனத்தின் த்ரெட் என்ற புதிய செயலியும், ட்விட்டருக்கு மாற்றாக உருவாக்கப்பட்டு வந்த நிலையில், பயனர்கள் ட்விட்டரிலிருந்து வெளியேறுவதைக் கருத்தில் கொண்டு, உடனடியாக அதனுடைய பீட்டா வெர்ஷனை மார்க் ஜுக்கர்பெர்க் வெளியிட்டார். இந்த தளத்திலும் ட்விட்டர் போலவே எல்லாவற்றையும் செய்ய முடியும். 

புதிய விதிமுறைகளின் படி, சரிபார்க்கப்படாத பயனர்கள் ஒரு நாளைக்கு 1000 ட்வீட்டுகளை மட்டுமே அணுக முடியும். இதுவே கணக்கு சரிபார்க்கப்பட்டவர்கள் நாள் ஒன்றுக்கு 10000 ட்வீட்டுகள் வரை அணுகலாம். ஒரு பயனர் தன்னுடைய தினசரி வரம்பை எட்டிவிட்டால், மேற்கொண்டு ட்வீட்டுகளை அவரால் பார்க்க முடியாது.  இடுக்கைகளை மீண்டும் படிக்க அவர் அடுத்த நாள் வரை காத்திருக்க வேண்டும். 

இந்த வரம்புகளை ட்விட்டர் பயனர்களில் ஒரு பகுதியினர் ஆதரிக்கின்றனர். ஏனென்றால், AI Bot-களைப் பயன்படுத்தி அதிக அளவிலான ட்வீட் போடுபவர்களை இந்த கொள்கை கட்டுப்படுத்தும் என அவர்கள் நம்புகின்றனர். இருப்பினும் பெரும்பாலான பயனர்கள், இந்த விதிமுறைகள் சாதாரணப் பயனர்களை கட்டண சந்தாதாரர்களாக மற்றும் எலான் மஸ்கின் புதிய யுக்தி எனக் கூறுகிறார்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com